Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“தைரியம் இருந்தா இப்ப பேசு பார்க்கலாம்” வங்கதேச வீரரை வெளுத்து வாங்கிய கோலி.. 2வது டெஸ்டில் பரபரப்பு

டாக்கா: வங்கதேச அணியுடனான 2வது டெஸ்ட் போட்டியின் போது விராட் கோலியை தேவையின்றி வங்கதேச பவுலர் சீண்ட, பதிலுக்கு அவர் ஆக்ரோஷமாக வார்த்தைகளை விட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

டெஸ்ட் போட்டிகளையும் - விராட் கோலியின் சண்டையையும் பிரிக்கவே முடியாத ஒன்றாக இருந்து வருகிறது. அவரின் ஆக்ரோஷங்கள், வார்த்தைகள், பேட்டிங்கால் பதிலடி கொடுப்பது போன்றவை வங்கதேச அணியுடனான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் நீடித்து வருகிறது.

இந்த தொடரில் ஏற்கனவே வங்கதேச வீரர் லிட்டன் தாஸ் - சிராஜ் ஆகியோருக்கு ஏற்பட்ட வாக்குவாதத்தில் விராட் கோலி உள்ளே நுழைந்து பதிலடி கொடுத்தார். அவரின் செயல்பாடு இணையத்தில் தீயாய் பரவியது.

கோலியிடம் சண்டை

கோலியிடம் சண்டை

இந்நிலையில் தற்போது விராட் கோலிக்கே நேரடியாக பிரச்சினை ஏற்பட்டுள்ளது. 2வது இன்னிங்ஸில் ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் 12 ரன்களுக்குள் வெளியேறியதால், விராட் கோலி களமிறங்கி நிதானமாக விளையாடினார். 22 பந்துகளை சந்தித்து வெறும் ஒரு ரன்னை மட்டுமே எடுத்திருந்த அவர், மெஹிடி ஹாசன் மிராஸ் பந்துவீச்சில் துரதிஷ்டவசமாக அவுட்டானார்.

பிரச்சினை என்ன

பிரச்சினை என்ன

கோலி அவுட்டானவுடன் வங்கதேச பவுலர் தைஜுல் இஸ்லாம், அவர் குறித்து ஏதோ கிண்டலடிக்கும் வகையில் கூறினார். இதனைக்கேட்டு ஆத்திரமடைந்த விராட் கோலி, தைஜுல் இஸ்லாமிடம் நெருங்கி எதுவாக இருந்தாலும் முகத்திற்கு நேராக சொல் பார்க்கலாம் என கடுமையான வார்த்தைகளில் கூறினார். இதனையடுத்து உள்ளே வந்த வங்கதேச கேப்டன் சகிப் உல் ஹாசன் மற்றும் அம்பயர்கள் உள்ளே வந்து சமாதானப்படுத்தினர்.

 தணியாத கோபம்

தணியாத கோபம்

களத்தை விட்டு செல்லும் வரையில் விராட் கோலியின் கோபம் தணியவே இல்லை. நடுவர்களிடம் கத்திக்கொண்டே வெளியேறினார். இதனை பார்த்த ரசிகர்கள், டெஸ்ட் கிரிக்கெட்டில் 3 ஆண்டுகளாக மோசமான செயல்பாடுகளில் இருக்கிறார், ஆனால் சண்டை மட்டும் உடனுக்குடன் வந்துவிடுகிறது, கோபத்தை ஆட்டத்தில் காட்டுங்கள் என விமர்சித்து வருகின்றனர்.

மோசமான செயல்பாடு

மோசமான செயல்பாடு

2 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் மொத்தம் 4 இன்னிங்ஸ்களிலும் விராட் கோலி 1, 19*, 24, 1 என சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்துள்ளார். இதனால் இந்திய அணி 45 ரன்களுக்கெல்லாம் 4 விக்கெட்களை இழந்து தடுமாறி வருகிறது. டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் கம்பேக் கொடுத்ததை போன்றே டெஸ்ட் கிரிக்கெட்டிலும் கோலி கம்பேக் கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Saturday, December 24, 2022, 18:41 [IST]
Other articles published on Dec 24, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+