Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அம்பயரிடம் சண்டை போட்டு அவுட்டில் இருந்து தப்பிய விராட் கோஹ்லி! டெல்லி டெஸ்டில் பரபரப்பு

டெல்லி: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின்போது, அவுட் கொடுத்த நடுவருக்கு எதிராக விராட் கோஹ்லி வாக்குவாதம் நடத்திய சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி டெல்லியில் நடைபெற்று வருகிறது.

இன்று இந்தியா 2வது இன்னிங்ஸ் ஆடி வந்தபோது, 53 ரன்களுக்குள் 3 விக்கெட்டுக்களை இழந்து தவித்தது. அந்த நிலையில், 34வது ஓவரை இம்ரான் தாஹிர் வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தை விராட் கோஹ்லி சந்தித்தார்.

அவுட் கொடுத்த நடுவர்

அவுட் கொடுத்த நடுவர்

விராட் கோஹ்லி அதை அடிக்க முயன்றார். ஆனால் பந்து பேட்டில் படாமல் விக்கெட் கீப்பரிடம் சென்றது. தென் ஆப்பிரிக்கா வீரர்கள் அவுட்டிற்காக, அப்பீல் கேட்க நடுவரும் உடனே அவுட் கொடுத்துவிட்டார்.

அம்பயருக்கு திட்டு

அம்பயருக்கு திட்டு

இதனால் கடும் கோபம் அடைந்த விராட் கோஹ்லி ஆடுகளத்தை விட்டு வெளியேறாமல் சிறிது நேரம் நின்றபடி ஏதோ திட்டுவதை போல முனகிக்கொண்டருந்தார்.

நோ-பால் சந்தேகம்

நோ-பால் சந்தேகம்

இந்நிலையில் தாஹிர் கிரீசுக்கு வெளியில் வந்து நோபாலாக அந்த பந்தை வீசியிருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில், சோதித்து பார்ப்பதற்காக மைதான நடுவர் மூன்றாவது நடுவரை நாடினார். 3வது நடுவர் அதை நோ-பால் என்று அறிவித்தார். இதனால் விராட் கோஹ்லி அவுட்டில் இருந்து தப்பினார்.

எதற்காக நோ-பால்?

எதற்காக நோ-பால்?

ஆனால் டிவியில் ரிப்ளே பார்த்தவர்களுக்கு, தாஹிர் கிரீசுக்கு உள்ளே காலை வைத்திருந்தது தெரிந்தது. ஆனால் பந்து பேட்டில் படவில்லை என்பதும் தெரிந்தது. எனவே, 3வது நடுவர் நோ-பால் என்று அறிவித்தது பேட்டில் படவில்லை என்பதற்காக இருக்கலாம் என்று தெரிகிறது.

Story first published: Saturday, December 5, 2015, 16:07 [IST]
Other articles published on Dec 5, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+