Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சுப்மான் கில்லுக்கு கோலி கொடுத்த பரிசு.. மகிழ்ச்சியில் துள்ளி குதிக்கும் கில்.. இன்ஸ்டாவில் ருசிகரம்

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் இளம் நட்சத்திர வீரர் சுப்மான் கில்லுக்கு, முன்னாள் கேப்டன் கோலி இன்ப அதிர்ச்சி ஒன்றை தந்துள்ளார்.

2018ஆம் ஆண்டு அண்டர் 19 கிரிக்கெட் தொடரில் இந்திய அணியில் களமிறங்கிய சுப்மான் கில், அதிரடியாக விளையாடி அந்த தொடரில் அதிக ரன்கள் அடித்து சாதனை படைத்தார்.

விராட் கோலி போலவே விளையாடுகிறார் என்று அனைவராலும் பாராட்டப்பட்ட சுப்மான் கில், சிறந்த ஜூனியர் கிரிக்கெட் வீரர் விருதை 3 முறை வென்றார்.

ஆஸியில் சாதனை

ஆஸியில் சாதனை

இதனையடுத்து ரஞ்சி கோப்பையில் அபாரமாக விளையாடிய சுப்மான் கில்லுக்கு, இந்திய டெஸட் அணியில் இடம் கிடைத்தது. கடினமான ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் தொடக்க வீரராக சுப்மான் கில், 45,30,50,31,7,91 என ரன் குவித்தார். இதன் பின்னர் இந்திய அணியில் தொடர்ந்து இடம் கிடைத்தாலும் காயம் காரணமாக ஓய்வில் இருந்தார்.

சாராவுடன் காதல்

சாராவுடன் காதல்

கிரிக்கெட்டில் சுப்மான் கில் ஜொலித்தாலும், சச்சின் மகள் சாராவுடன் சுற்றுவதாக செய்திகள் வெளியாகின. இதனால் சுப்மான் கில் ரசிகர்களிடையே தனி கவனத்தை பெற்றார். இந்த நிலையில், ஐபிஎல் தொடரில் முதலில் கொல்கத்தா அணிக்காக விளையாடிய சுப்மான் கில், தற்போது குஜராத் அணிக்காக விளையாடி வருகிறார்.

இன்ஸ்டா பதிவு

இன்ஸ்டா பதிவு

சுப்மான் கில் திறமையான வீரராக இருந்தாலும், பெரிய ஸ்கோர் அடிக்காமல் அவுட் ஆகிறார் என்று சச்சின் டெண்டுல்கரும் விமர்சித்தார். இந்த நிலையில் தான் சுப்மான் கில், டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் 84 ரன்கள் விளாசினார். இதனை தொடர்ந்து சுப்மான் கில், இன்ஸ்டாகிராமில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

கோலியின் பரிசு

கோலியின் பரிசு

அதில் கீழே கமெண்ட் செய்துள்ள விராட் கோலி, வாட்ச் சூப்பராக இருக்கு என்று பதிவிட்டு இருந்தார். அதற்கு சுப்மான் கில், கிங் ஒருவர் பரிசாக அளித்தார் என்று கூறியுள்ளார். இதனை ரசிகர்கள் அதிகளவில் பகிர்ந்து வருகின்றனர். விராட் கோலி இளம் வீரருக்கு அளித்த பரிசு ரசிகர்களை நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது.

Story first published: Tuesday, April 5, 2022, 15:44 [IST]
Other articles published on Apr 5, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+