Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அனுஷ்காவிற்கு ஸ்பெஷல் கிப்ட்.. மறக்க முடியாத திருமண நாள்.. விராட் கோலி செம ஹேப்பி!

Recommended Video

Virat kohli's wedding anniversary | Special and Unique gift to Anushka

மும்பை : தங்களுடைய இரண்டாவது திருமண நாளில் தன்னுடைய மனைவி அனுஷ்கா சர்மாவிற்கு தான் சிறப்பான திருமண பரிசை அளித்துள்ளதாக இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 3வது சர்வதேச டி20 போட்டியில் இந்தியா 67 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை சுவைத்து தொடரை கைப்பற்றியுள்ளது.

இந்த போட்டியில் 29 பந்துகளுக்கு 70 ரன்களை அடித்து தொடர் நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்ட விராட் கோலி, தங்களுடைய இரண்டாவது திருமண நாளில் தன்னுடைய மனைவிக்கு தான் சிறப்பான பரிசை அளித்துள்ளதாக மகிழ்ச்சி தெரிவித்தார்.

 மனைவிக்கு பரிசளித்த விராட் கோலி

மனைவிக்கு பரிசளித்த விராட் கோலி

கடந்த 2017 டிசம்பர் 11ம் தேதி இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி மற்றும் பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா இருவருக்கும் இத்தாலியில் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், தங்களது 2வது திருமண நாளை நேற்று அவர்கள் கொண்டாடினர். இந்த திருமண நாளில் தன்னுடைய மனைவிக்கு சிறப்பான பரிசை கோலி அளித்துள்ளார்.

 3வது சர்வதேச டி20 போட்டி

3வது சர்வதேச டி20 போட்டி

மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணி மோதிய 3வது டி20 போட்டி நடைபெற்றது. இதில் இந்தியா அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 67 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

 விளாசி தள்ளிய விராட் கோலி

விளாசி தள்ளிய விராட் கோலி

போட்டியில் 4வதாக களமிறங்கிய கேப்டன் விராட் கோலி, துவக்கம் முதலே தன்னுடைய அதிரடி ஆட்டத்தை நிகழ்த்திக் காட்டினார். 29 பந்துகளில் அவர் அடித்த 70 ரன்கள் ரசிகர்களின் கைதட்டல்களுக்கு இடைவெளி இல்லாமல் செய்தது.

 ஸ்டிரைக் ரேட் 241.38

ஸ்டிரைக் ரேட் 241.38

இதுவரை இல்லாத அளவில் இந்த போட்டியில் விராட் கோலி 7 சிக்ஸ்களையும், 4 பவுண்டரிகளையும் விளாசினார். இந்த போட்டியில் அவரது ஸ்டிரைக் ரேட் 241.38ஆக இருந்தது.

 கோப்பையை பறிகொடுத்த மேற்கிந்திய தீவுகள்

கோப்பையை பறிகொடுத்த மேற்கிந்திய தீவுகள்

இந்தியா - மேற்கிந்திய தீவுகள் அணி மோதிய 3வது போட்டியில் முதலில் களமிறங்கிய இந்திய அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 240 ரன்களை அடித்த நிலையில், அடுத்ததாக விளையாடிய மேற்கிந்திய தீவுகள் அணி, 173 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து தொடரை இந்தியாவிடம் பறிகொடுத்தது.

மனைவிக்கு சிறப்பு பரிசு

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய விராட் கோலி, தங்களுடைய இரண்டாவது திருமண நாளில், தன்னுடைய மனைவி அனுஷ்கா சர்மாவிற்கு தன்னுடைய அதிரடி ஆட்டத்தின் மூலம் சிறப்பு பரிசு அளித்துள்ளதாக மகிழ்ச்சி தெரிவித்தார்.

ஒருவருக்கொருவர் வாழ்த்து

முன்னதாக தங்களுடைய திருமண நாளையொட்டி டிவிட்டர் மூலம் விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா இருவரும் ஒருவருக்கொருவர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். அனுஷ்கா சர்மா போன்ற ஒருவர் தனது மனைவியாக கிடைத்ததற்கு தினந்தோறும் தான் கடவுளுக்கு நன்றி தெரிவிப்பதாக விராட் கூறினார்.

Story first published: Thursday, December 12, 2019, 12:03 [IST]
Other articles published on Dec 12, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+