
107 ரன்களில் வெற்றி பெற்ற இந்தியா
கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்னையில் நடைபெற்ற முதல் ஒருநாள் சர்வதேச போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வியை தழுவிய நிலையில், விசாகப்பட்டினத்தில் நேற்று நடைபெற்ற இரண்டாவது போட்டியில் 107 ரன்களில் வெற்றி பெற்றுள்ளது.

பார்ட்னர்ஷிப்பில் 227 ரன்கள்
நேற்றைய போட்டியில் துவக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ரோகித் ஷர்மா மற்றும் கே.எல். ராகுல் இருவரும் சதமடித்து அணியை பலப்படுத்தினர். இவர்கள் இருவரும் சேர்ந்து பார்ட்னர்ஷிப்பில் 227 ரன்களை விளாசி தள்ளினர்.

ஐசிசி பாராட்டு
இந்திய அணி சார்பில் 4வதாக களமிறங்கி வரும் ஸ்ரேயாஸ் ஐயர், தொடர்ந்து அந்த இடத்தில் விளையாடி, சிறப்பான ஆட்டங்களை பதிவு செய்து வருகிறார். அவரின் ஆட்டத்தைப் பார்த்து ஐசிசியும் தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளது.

முன்னதாகவே கொண்டாட்டம்
மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான நேற்றைய ஆட்டத்தில் ஸ்ரேயாஸ் ஐயர் 53 ரன்களை எடுத்துள்ளார். முன்னதாக 49 ரன்களை எடுத்த நிலையில், தன்னுடைய அரைசதத்திற்கான கொண்டாட்டத்தில் அவர் ஈடுபட்டார்.
கலாய்த்த கேப்டன் கோலி
பெவிலியனில் இருந்த சக வீரர்கள் சைகை மூலம் அவருக்கு அரைசதம் முடியாததை தெரிவித்ததையடுத்து அவர், உடனடியாக சுதாரித்துக் கொண்டு கொண்டாட்டத்தை நிறுத்திக் கொண்டார். இதனிடையே, அரைசதத்திற்கு முன்னதான அவரது கொண்டாட்டத்தை கேப்டன் கோலி சிரிப்புடன் கேலி செய்தார்.

வைரலான வீடியோ
ஸ்ரேயாஸ் ஐயரை கேப்டன் விராட் கோலி கலாய்த்த இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











