Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“என்ன ஆனாலும் விடமாட்டேன்..”.. பேட்டிங் ஃபார்ம் குறித்த விமர்சனம்.. விராட் கோலி கொடுத்த தரமான பதிலடி

மும்பை: இந்திய அணிக்கு கம்பேக் கொடுப்பது குறித்து விராட் கோலி முதல் முறையாக மனம் திறந்துள்ளார்.

இந்திய அணி தற்போது வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாடி வருகிறது.

இந்த தொடரில் இருந்து முன்னணி வீரர் விராட் கோலிக்கு ஓய்வு தரப்பட்டது தான் இந்திய கிரிக்கெட்டில் பேசுப்பொருளாக மாறியது.

கோலியின் ஓய்வு

கோலியின் ஓய்வு

ஃபார்ம் அவுட்டில் உள்ள விராட் கோலி இங்கிலாந்து சுற்றுப்பயணத்திலும் மோசமாக சொதப்பினார். எனவே வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ஓய்வு தேவை எனக்கேட்டிருந்த கோலி, ஆசியக்கோப்பை தொடரில் நல்ல கம்பேக் தருவேன் என தேர்வுக்குழு அதிகாரியிடம் கூறியிருக்கிறார். அதன்படி தான் தற்போது குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட்டு வருகிறார்.

மனம் திறந்த கோலி

மனம் திறந்த கோலி

இந்நிலையில் இதுகுறித்து விராட் கோலி பேசியுள்ளார். ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அவர், இந்திய அணிக்கு ஆசியக்கோப்பை மற்றும் உலகக்கோப்பையை வெல்வதற்கு உதவுவதே தான் தற்போதைக்கு எனது எண்ணத்தில் உள்ளது. அதற்காக நான் என்னவேண்டுமானாலும் செய்ய தயாராக உள்ளேன். நிச்சயம் அதனை செய்து முடிப்பேன் என விராட் கோலி கூறியுள்ளார்.

 கிளம்பிய எதிர்ப்புகள்

கிளம்பிய எதிர்ப்புகள்

விராட் கோலியின் ஓய்வுக்கு ரசிகர்கள் மற்றும் வல்லுநர்கள் ஒருபுறம் பாராட்டி வந்த போதும், மற்றொரு புறம் எதிர்ப்புகள் கிளம்பி வருகின்றன. ஒரு வீரர் ஃபார்ம் அவுட்டானால், தொடர்ச்சியாக விளையாடினால் மட்டுமே அவரால் கம்பேக் கொடுக்க முடியும். இன்னும் அவருக்கு எவ்வளவு ஓய்வு தான் கொடுப்பீர்கள் என கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

பிசிசிஐ-ன் திடீர் மாற்றம்

பிசிசிஐ-ன் திடீர் மாற்றம்

இதன் காரணமாக தான் பிசிசிஐ திடீர் மாற்றத்தை கொண்டு வந்தது. ஆசியக்கோப்பை தொடருக்கு முன்பாக இந்திய அணி ஆகஸ்ட் 18ம் தேதி முதல் 22ம் தேதி ஜிம்பாவேவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. இந்த தொடரில் இளம் வீரர்களுடன் சேர்ந்து விராட் கோலியும் சென்று விளையாட வேண்டும் என பிசிசிஐ அறிவுறுத்தியுள்ளது.

Story first published: Saturday, July 23, 2022, 18:01 [IST]
Other articles published on Jul 23, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+