Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“இதை விட பெரிய விளக்கம் இருக்கா?” ஒரே பதிவில் விமர்சனங்களுக்கு பதிலடி.. கெத்து காட்டிய விராட் கோலி!

லண்டன்: சமூகவலைதளங்களில் விராட் கோலி பதிவிட்டுள்ள ஒற்றை புகைப்படம், சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

இந்திய கிரிக்கெட்டில் தற்போது மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வரும் விஷயம் விராட் கோலியின் பேட்டிங் ஃபார்ம் தான்.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் இருந்து அவருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது.

குவியும் விமர்சனங்கள்

குவியும் விமர்சனங்கள்

கடந்த 2 ஆண்டுகளாகவே மோசமான ஃபார்மில் இருக்கும் கோலி, டி20 உலகக்கோப்பை தொடருக்கு பின் 23 போட்டிகளில் விளையாடாமல் ஓய்வு எடுத்துள்ளார். எனினும் அவர் ஃபார்முக்கு திரும்பவில்லை. எனவே டி20 உலகக்கோப்பை தொடரில் அவருக்கு வாய்ப்பு கிடைக்குமா? ஓய்வுக்கு பின் கம்பேக் தருவாரா என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

இன்ஸ்டா பதிவில் பதிலடி

இன்ஸ்டா பதிவில் பதிலடி

இந்நிலையில் தன்மீதான சர்ச்சைகளுக்கு ஒரு புகைப்படம் மூலம் கோலி தரமான பதிலடி கொடுத்துள்ளார். அதில் 2 சிறகுகளுக்கு இடையில் கோலி அமர்ந்துள்ளார். மேலும் அந்த புகைப்படத்தில், "ஒருவேளை நான் கீழே விழுந்திட்டால் ? என்ற கேள்வி இருக்க, அதற்கு கீழ் " ஒருவேளை நீ மேலும் மேலும் பறக்கலாம் அல்லவா?" என பதில் கொடுக்கும் படி வாசகம் இடம்பெற்றுள்ளது.

அர்த்தம் என்ன?

அர்த்தம் என்ன?

இந்த புகைப்படத்தை பதிவிட்டுள்ள கோலி, ஒவ்வொருத்தரின் எண்ணங்கள் மற்றும் கண்னோட்டம் தான் அனைத்தையும் நிர்ணயிக்கும். எனவே நல்ல கண்னோட்டத்துடனே பாருங்கள் என்பது போன்று மறைமுகமாக கூறியுள்ளார். இதனை ரசிகர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

பீட்டர்சன் ஆதரவு

பீட்டர்சன் ஆதரவு

கோலியின் பதிவுக்கு கமெண்ட் செய்துள்ள கெவீன் பீட்டர்சன், " நீ மேலும் மேலும் வளர்வாய் நண்பனே.. பல்வேறு முன்னணி வீரர்களுக்கும் உன்னை போன்று சாதனை படைக்க வேண்டும் என்று தான் ஆசை இருக்கிறது. அத்தகைய சிறந்த கிரிக்கெட் வீரர் நீ.. மீண்டு வா என்பது போன்று பதிவிட்டுள்ளார்.

Story first published: Saturday, July 16, 2022, 17:33 [IST]
Other articles published on Jul 16, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+