Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மகிழ்ச்சியில் துள்ளிய இலங்கை வீரர்கள்.. கடைசியில் கோலி தந்த ட்விஸ்ட்.. இலங்கைக்கு இமாலய இலக்கு!

கவுகாத்தி: இலங்கை அணியுடனான முதல் ஒருநாள் போட்டியில் விராட் கோலியிடம் சிக்கி இலங்கை வீரர்கள் வேதனைப்பட்ட காட்சிகள் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. குறிப்பாக பயிற்சியாளர் கிறிஸ் சில்வர்வுட் சோகமானது ட்ரெண்டிங்கில் உள்ளன.

இரு அணிகளுக்கும் இடையேயான முதல் போட்டி கவுகாத்தியில் உள்ள மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்ய, இந்தியா பேட்டிங்கில் கலக்கியது.

ஓப்பனிங் வீரர்கள் ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் அட்டகாசமான அடிதளத்தை அமைத்தனர். ஒருபுறம் ரோகித் 83 ரன்களும், சுப்மன் கில் 70 ரன்களையும் குவிக்க முதல் விக்கெட்டிற்கு மட்டும் 143 ரன்கள் சேர்ந்தன.

கோலியின் ரெக்கார்ட்

கோலியின் ரெக்கார்ட்

இவர்களுக்கு பின்னர் களமிறங்கிய விராட் கோலி, இந்திய அணியை அதே ரன் ரேட்டுடன் கடைசி வரை கொண்டு சென்றார். வழக்கம் போல தனக்கே உரிய பாணியில் நிதானமாக தொடங்கிய கோலி, சீரான வேகத்தில் பவுண்டரி மழையை பொழிந்தார். இதன் மூலம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 45வது சதத்தை பூர்த்தி செய்தார். மேலும் இலங்கைக்கு எதிராக ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதங்கள் (9) அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

2 பெரும் ட்விஸ்ட்கள்

2 பெரும் ட்விஸ்ட்கள்

இந்நிலையில் இந்த சதம் வருவதற்கு முன்னால் 2 பெரும் ட்விஸ்ட்கள் நடந்துள்ளன. விராட் கோலி அரைசதம் அடித்தவுடனேயே அவரை அவுட்டாக்குவதற்கான வாய்ப்பு கிடைத்தது. ஆட்டத்தின் 36வது ஓவரில் ரஜிதா வீசிய ஷார்ட் பாலை கோலி இறங்கி வந்து கட் ஷார்ட் ஆட முயன்றார். துரதிஷ்டவசமாக பால் எட்ஜாகி கீப்பரிடம் சென்றது. கீப்பரும் டைவ் அடித்து பந்தை கைக்குள் வாங்கினார். இதனால் இலங்கை வீரர்கள் மகிழ்ச்சியடைந்தனர். ஆனால் கடைசி நேரத்தில் பந்தை கைக்குள் இருந்து வெளியே தவறவிட்டார்.

2வது வாய்ப்பு

2வது வாய்ப்பு

இந்த கேட்ச்-ஐ தவறவிட்டதால், விராட் கோலி மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோர் அச்சுறுத்தும் வகையில் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இதே போல விராட் கோலி 80 ரன்களில் இருந்த போதும் ஒரு வாய்ப்பு கிடைத்தது. ரஜிதா வீசிய அவுட்சைட் ஆஃப் பந்தை கோலி ஸ்ட்ரைட் ட்ரைவ் ஆட முயன்ற போது பந்து எக்ஸ்ட்ரா கவர் திசையில் சென்றது. அப்போது அங்கிருந்த ஷனகா அழகாக கேட்ச்-ஐ பிடித்திருக்கலாம். ஆனால் மோசமாக தவறவிட்டார்.

இமாலய இலக்கு

இமாலய இலக்கு

கேட்ச்-களை தாண்டியும் சிறப்பாக விளையாடிய விராட் கோலி 87 பந்துகளில் 12 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 113 ரன்களை விளாசினார். சர்வதேச கிரிக்கெட்டில் அவரின் 75வது சதம் இதுவாகும். கோலி ஒருபுறம் சதமடிக்க, மறுபுறம் விக்கெட்கள் சரிந்தன. இதனால் 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட்கள் இழப்புக்கு 373 ரன்களை குவித்தது.

Story first published: Tuesday, January 10, 2023, 17:44 [IST]
Other articles published on Jan 10, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+