Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மோதிர கையால் குட்டு... சூர்யகுமார் -இஷானுக்கு டி20 கேப்பை கொடுத்துருக்காரு கேப்டன்!

அகமதாபாத் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையில் இரண்டாவது டி20 போட்டி அகமதாபாத்தில் துவங்கியுள்ளது.

இந்த போட்டியில் ஷிகர் தவான் மற்றும் அக்சர் படேலுக்கு பதிலாக சூர்யகுமார் யாதவ் மற்றும் இஷான் கிஷன் தங்களது அறிமுக போட்டியில் களமிறங்கியுள்ளனர்.

இந்நிலையில் போட்டிக்கு முன்னதாக அவர்கள் இருவரும் தங்களது டி20 கேப்பை கேப்டன் விராட் கோலி கையால் பெற்றனர்.

2வது டி20 போட்டி துவக்கம்

2வது டி20 போட்டி துவக்கம்

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 2வது டி20 போட்டி அகமதாபாத்தின் நரேந்திர மோடி மைதானத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு இந்தியா தோல்வியுற்ற நிலையில் இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்ய தீவிரம் காட்டி வருகிறது.

அறிமுக போட்டி

அறிமுக போட்டி

இந்நிலையில் இந்த போட்டியில் ஷிகர் தவான் மற்றும் அக்சர் படேலுக்கு பதிலாக சூர்யகுமார் யாதவ் மற்றும் இஷான் கிஷன் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் இருவரும் இந்த போட்டியின்மூலம் தங்களது சர்வதேச முதல் டி20 போட்டியில் களமிறங்கியுள்ளனர்.

இருவரும் இணைந்து பெற்றனர்

இருவரும் இணைந்து பெற்றனர்

கடந்த ஐபிஎல், முஸ்தாக் அலி கோப்பை தொடர்களில் சிறப்பாக விளையாடிய இவர்கள் தற்போது டி20 போட்டியில் அறிமுகமாகியுள்ளனர். இதையடுத்து இவர்கள் இருவருக்கும் கேப்டன் கோலி இந்திய டி20 கேப்பை அளித்துள்ளார். கடந்த ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரில் சூர்யகுமார் இடம்பெறாதது சர்ச்சையை ஏற்படுத்தியது. பல்வேறு தரப்பினரும் கோலியை குற்றம் சாட்டியிருந்தனர்.

வியப்பை ஏற்படுத்திய நிகழ்வு

வியப்பை ஏற்படுத்திய நிகழ்வு

இந்நிலையில் இந்த டி20 தொடரில் மும்பை இந்தியன்ஸ் வீரர்கள் சூர்யகுமார் மற்றும் இஷான் கிஷன் இருவருக்கும் தற்போது வாய்ப்பு கிடைத்துள்ளது. மேலும் அவர்களுக்கான அறிமுக கேப்பை விராட் கோலி கொடுத்துள்ளது அனைவரையும் வியப்படைய செய்துள்ளது. இந்த போட்டியில் கேஎல் ராகுலுடன் இஷான் கிஷன் துவக்க வீரராக களமிறங்கி ஆடவுள்ளார்.

Story first published: Sunday, March 14, 2021, 20:55 [IST]
Other articles published on Mar 14, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+