Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“பேசாம போய்டுங்க.. ” விராட் கோலியை கடுப்பேற்றிய ரசிகர்கள்..பயிற்சியின் போது நடந்த சம்பவம் - வீடியோ!

மெல்பேர்ன்: டி20 உலகக்கோப்பைகான பயிற்சியின் போது, விராட் கோலியை ரசிகர்கள் கடுப்பேற்றிய வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் முதல் சுற்று போட்டிகள் முடிவுக்கு வந்துள்ளதால், அனைவரின் கவனமும் சூப்பர் 12 சுற்று பக்கம் திரும்பியுள்ளது.

இதில் இந்திய அணி தனது முதல் போட்டியாக பாகிஸ்தான் அணியை வரும் அக்டோபர் 23ம் தேதி நடைபெறவுள்ளது.

இந்தியா vs பாகிஸ்தான்

இந்தியா vs பாகிஸ்தான்

கடந்த டி20 உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தானிடம் பெற்ற தோல்விக்கு இந்திய அணி பதிலடி கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இதற்காக மெல்பேர்ன் சென்றடைந்த இந்திய அணி வீரர்கள் அங்கு தீவிர வலைபயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக சாஹீன் அஃப்ரிடியின் பவுலிங்கை சமாளிக்க விராட் கோலி, ரோகித் சர்மா, கே.எல்.ராகுல் ஆகியோர் த்ரோ டவுன் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

ரசிகர்கள் கோஷம்

ரசிகர்கள் கோஷம்

இந்நிலையில் பயிற்சியின் போது ரசிகர்கள் செய்த விஷயம் விராட் கோலியை கோபப்படுத்தியுள்ளது. வழக்கத்திற்கு மாறாக விராட் கோலி நீண்ட நேரம் வலைபயிற்சி செய்து வருகிறார். அந்தவகையில் இன்று பேட்டிங் செய்துக்கொண்டிருந்த போது, பின்னால் இருந்த ரசிகர்கள், சிக்ஸர் அடியுங்கள், மைதானத்திற்கு வெளியே சென்றுவிட்டதே என்பது போல சத்தமிட்டுக்கொண்டிருந்துள்ளதாக தெரிகிறது. ஆனால் இது கோலியிடம் நன்றாக போய் சேரவில்லை.

கோலி எச்சரிக்கை

கோலி எச்சரிக்கை

கடுப்பான கோலி, நேராக ரசிகர்களிடம் வந்து, பயிற்சியின் போது இப்படி சத்தம் போட்டுக்கொண்டே இருக்கக்கூடாது; பேட்டிங் செய்யும் போது இப்படி செய்தால் கவனசிதறல்கள் ஏற்படும். சத்தமில்லாமல் பாருங்கள் என எச்சரிக்கை விடுத்தார். இதனையடுத்து ரசிகர்கள் கோஷம் எழுப்பாமல் அமைதியாக நின்று உற்சாகப்படுத்தினர். இதுகுறித்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

அட்டகாச கம்பேக்

2 வருடங்களாக பேட்டிங்கில் சொதப்பி வந்த விராட் கோலி, ஆசிய கோப்பை முதல் அட்டகாசமான கம்பேக் கொடுத்துள்ளார். மற்ற வீரர்கள் அதிரடி காட்டிய போது, கோலி மட்டும் தூண் போன்று நிலைத்து நின்று விளையாடுகிறார். பாகிஸ்தானுக்கு எதிராக எப்போதும் கோலி சிறப்பாக விளையாடுவார் என்பதால் இந்த முறையும் அவரின் அதிரடியை எதிர்பார்க்கலாம்.

Story first published: Friday, October 21, 2022, 16:06 [IST]
Other articles published on Oct 21, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+