For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

டெஸ்ட் தரவரிசை.... 4வது இடத்துக்கு இறங்கிய கேப்டன்... முதல் 50 இடங்களில் 8 இந்திய வீரர்கள்!

டெல்லி : இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான தொடரை இந்தியா 2க்கு 1 என்ற கணக்கில் வெற்றி கொண்டுள்ளது.

இதையடுத்து ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

இந்நிலையில் டெஸ்ட் பேட்ஸ்மேன்களில் தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது. இதில் விராட் கோலி 4வது இடத்திற்கு கீழிறங்கியுள்ளார்.

தரவரிசையில் 2வது இடம்

தரவரிசையில் 2வது இடம்

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் தொடர் நேற்றைய தினம் நிறைவடைந்துள்ளது. இதையடுத்து ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணி இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. இந்நிலையில் ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன்களின் தரவரிசை பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

4வது இடத்திற்கு இறங்கிய கோலி

4வது இடத்திற்கு இறங்கிய கோலி

இதில் 3வது இடத்திலிருந்து 4வது இடத்திற்கு கேப்டன் விராட் கோலி கீழிறங்கியுள்ளார். கடந்த ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் போட்டியில் மட்டுமே பங்கேற்ற அவர், அடுத்த 3 போட்டிகளில் பங்கேற்காமல் தன்னுடைய குழந்தை பிறப்பிற்காக நாடு திரும்பினார். இதையடுத்து அவர் டெஸ்ட் தரவரிசை பட்டியலிலும் கீழிறங்கியுள்ளார்.

7வது இடத்திற்கு முன்னேறிய புஜாரா

7வது இடத்திற்கு முன்னேறிய புஜாரா

முதல் மூன்று இடங்களில் நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன், ஆஸ்திரேலிய வீரர்கள் ஸ்மித் மற்றும் லாபுசாக்னே ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இந்நிலையில் 4வது போட்டியில் சிறப்பான ஆட்டத்தை அளித்த புஜாரா 7வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

8 இந்திய வீரர்கள் இடம்பிடிப்பு

8 இந்திய வீரர்கள் இடம்பிடிப்பு

இதேபோல, இந்த பட்டியலில் முதல் 50 இடங்களில் இந்திய வீரர்கள் 8 பேர் இடம்பெற்றுள்ளனர். சத்தீஸ்வர் புஜாரா 7வது இடத்திலும், ரஹானே 9வது இடத்திலும் பந்த் 13வது இடத்திற்கும் முன்னேறியுள்ளனர். ரோகித் (18), அகர்வால் (24), ஜடேஜா (33) மற்றும் சுப்மன் கில் (48) ஆகியோரும் பட்டியலில் முதல் 50 இடங்களில் உள்ளனர்.

அஸ்வின் 8வது இடத்திற்கு முன்னேற்றம்

அஸ்வின் 8வது இடத்திற்கு முன்னேற்றம்

இந்நிலையில் ரவி அஸ்வின் ஐசிசி பௌலர்கள் தரவரிசை பட்டியலில் 8வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இந்த பட்டியலில் முதல் 10 இடங்களில் உள்ள ஸ்பின்னர் அஸ்வின் மட்டுமே. கடந்த டெஸ்ட் தொடரில் தன்னுடைய சிறப்பான பௌலிங்கை வெளிப்படுத்தி ஆஸ்திரேலியாவின் முன்னணி வீரர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தார் அஸ்வின்.

Story first published: Wednesday, January 20, 2021, 16:37 [IST]
Other articles published on Jan 20, 2021
English summary
Ravi Ashwin moves to number 8 in ICC Test bowlers ranking
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+