Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

விராட் கோலி டக் அவுட்.. ராகுல் ஏமாற்றம்.. இந்தியா தடுமாற்றம்.. இலங்கை கொடுக்கும் கடும் நெருக்கடி

துபாய் : ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில் இலங்கைக்கு எதிராக விராட் கோலி டக் அவுட் ஆனார்.

Recommended Video

IND vs SL போட்டியில் Rohit Sharma அதிரடி! Comeback கொடுத்த Srilanka *Cricket

வாழ்வா சாவா என்ற கட்டத்தில் உள்ள இந்திய அணி இன்று இலங்கையை எதிர்கொள்கிறது. டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

இந்தியா, பாகிஸ்தானுக்கு பயன்படுத்தப்பட்ட அதே ஆடுகளம் இன்றைய ஆட்டத்திற்கும் பயன்படுத்தப்பட்டது. இதனால், பந்து பேட்டிற்கு வரவில்லை.

ராகுல் ஆட்டமிழப்பு

ராகுல் ஆட்டமிழப்பு

இன்றைய ஆட்டத்தில் இலங்கை அணி எந்த மாற்றத்தையும் செய்யவில்லை.இந்திய அணியை பொறுத்தவரை ரவி பிஸ்னாய் நீக்கப்பட்டு, அஸ்வினுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்த நிலையில், தொடக்க வீரராக ரோகித் சர்மா, கேஎல் ராகுல் ஆகியோர் களமிறங்கினர். சிஎஸ்கே வீரர் தீக்சனா வீசிய பந்தை, ஸ்விப் செய்ய முயன்ற போது, அவர் எல்பி டபிள்யூ ஆனார்.

கோலி மீதான எதிர்பார்ப்பு

கோலி மீதான எதிர்பார்ப்பு

பாகிஸ்தானுக்கு எதிராக நன்றாக விளையாடிய ராகுல், இம்முறை சொதப்பியதால் கேப்டன் ரோகித் சர்மா தனது விரக்தியை வெளிப்படுத்தினார். இதனைத் தொடர்ந்து நட்சத்திர வீரர் விராட் கோலி களத்துக்கு வந்தார். தொடர்ந்து 2 முறை அரைசதம் விளாசியதால், அவர் மீது பெரும் எதிர்பார்ப்பு எழுந்தது.

கோலி டக் அவுட்

கோலி டக் அவுட்

மதுசங்கா வீசிய பந்தை கணிக்காமல் லேக் சைடில் சிக்சர் அடிக்க விராட் கோலி முயன்ற போது கிளின் போல்ட் ஆகியதால் ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இதனையடுத்து 13 ரன்களுக்கு 2 விக்கெட் இழந்த இந்தியா தடுமாறியது. விராட் கோலி ஆடுகளத்தின் தன்மையை கணிக்காமல், பெரிய ஷாட் ஆடியதே ஆட்டமிழப்புக்கு காரணம் என்று கருதப்படுகிறது.

ரோகித் அதிரடி

ரோகித் அதிரடி

இதனையடுத்து, ரோகித் சர்மாவுடன் ஜோடி சேர்ந்த சூர்யகுமார் யாதவ் ஆகியோர் பொறுப்புடன் விளையாடி அணியை சரிவிலிருந்து மீட்டனர். முதலில் பொறுமையாக விளையாடிய ரோகித் சர்மா பிறகு அதிரடியை காட்டினார். 41 பந்துகளில் 72 ரன்கள் விளாசி ரோகித் ஆட்டமிழக்க, சூர்யகுமார் 29 பந்துகளில் 34 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் இந்திய அணி தடுமாற்றத்திலிருந்து தப்பித்தது.

Story first published: Tuesday, September 6, 2022, 22:04 [IST]
Other articles published on Sep 6, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+