Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இதுக்கா பேட்டிங் எடுத்தீங்க.. இந்தியாவின் இரு தூண்களும் காலி.. சாய்த்து காட்டிய ஷாகின் அப்ரிடி!

பாலக்கலே: பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர விராட் கோலி 4 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆசியக் கோப்பை போட்டி பாலக்கலேவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்திய அணி தரப்பில் முகமது ஷமிக்கு பதிலாக ஷர்துல் தாக்கூர் தேர்வு செய்யப்பட்டார். அதேபோல் விக்கெட் கீப்பராக இஷான் கிஷன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Virat Kohli got out for just 4 Runs against Pakistan in the Asia Cup 2023

இதையடுத்து இந்திய அணிக்காக கேப்டன் ரோகித் சர்மா - சுப்மன் கில் இருவரும் தொடக்கம் கொடுத்தனர். பாகிஸ்தான் அணி தரப்பில் ஷாகின் அப்ரிடி முதல் ஓவரை வீசினார். ஷாகின் அப்ரிடியின் பாம்பு வகை ஸ்விங் ரோகித் சர்மாவுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்று பார்க்கப்பட்டது. ஆனால் ரோகித் சர்மா அவரை எதிர்கொள்ள, பந்தை வரவிட்டு ஷாட்களை லேட்டாக விளையாடினார். இதன் மூலம் ரோகித் சர்மாவால் எளிதாக ரன்கள் சேர்க்க முடிந்தது.

Virat Kohli got out for just 4 Runs against Pakistan in the Asia Cup 2023

நசீம் ஷாவை எதிர்கொள்ள இளம் வீரர் சுப்மன் கில் திணறினாலும், ரோகித் சர்மா எந்தவித திணறலையும் வெளிப்படுத்தவில்லை. ஷாகின் அப்ரிடி பந்துவீச்சில் எளிதாக பவுண்டரிகளை விளாசினார். இதனால் ரோகித் சர்மா ஒரு முடிவுடன் களமிறங்கி இருக்கிறார் என்று இந்திய ரசிகர்கள் நம்பிக்கையோடு இருந்தனர். ஆனால் 5வது ஓவரில் 2வது பந்தின் முடிவில் மழை பெய்ய, ஆட்டம் சிறிது நேரம் தடைபட்டது. இதனால் ரோகித் சர்மா மட்டுமல்லாமல், ஓய்வறையில் ஹெல்மெட் அணிந்து அமர்ந்திருந்த விராட் கோலியும் ஏமாற்றமடைந்தார்.

Virat Kohli got out for just 4 Runs against Pakistan in the Asia Cup 2023

பின்னர் மழை குறைந்து ஆட்டம் தொடங்கிய நிலையில் ஷாகின் அப்ரிடி வீசிய அதே ஓவரின் கடைசி பந்தில் போல்டாகி ஆட்டமிழந்தார். பின்னர் வந்த விராட் கோலி நசீம் ஷா பந்துவீச்சில் பவுண்டரி விளாசி ரன் கணக்கை தொடங்கினார். இதனால் விராட் கோலி ஆட்டத்தை தொடங்கிவிட்டார் என்று பார்க்கப்பட்ட நிலையில், ஷாகின் அப்ரிடி பந்துவீச்சில் இன்சைட் எட்ஜாகி போல்டானார். இதனால் 7 பந்துகளில் 4 ரன்கள் மட்டும் விராட் கோலி பெவிலியன் திரும்பினார்.

இந்திய அணியின் இரு அனுபவ வீரர்களும் அடுத்தடுத்த ஓவர்களில் ஷாகின் அப்ரிடியிடம் வீழ்ந்தது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருவரும் போல்டாகி ஆட்டமிழந்ததால் மைதானத்தில் இருந்த ரசிகர்களின் மொத்த சத்தமும் அமைதியானது. இதனால் இந்திய அணி 27 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.

Story first published: Saturday, September 2, 2023, 16:44 [IST]
Other articles published on Sep 2, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+