Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இதற்கெல்லாம் அவுட்டா??.. பயிற்சி போட்டியிலேயே விராட் கோலி வாக்குவாதம்.. நடுவரின் முடிவால் சர்ச்சை!

இங்கிலாந்து: இந்திய அணியின் பயிற்சி போட்டியின் போது விராட் கோலி அம்பயர்களிடம் வாக்குவாதம் செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டி வரும் ஜூலை 1ம் தேதி தொடங்கவுள்ளது.

இதற்கான பயிற்சியை பெறுவதற்காக, கவுண்டி அணியுடன் இந்திய அணி 4 நாட்கள் கொண்ட போட்டியில் மோதி வருகிறது.

இந்திய அணி சொதப்பல்

இந்திய அணி சொதப்பல்

நேற்று தொடங்கிய இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 246 /8 ரன்களுக்கு டிக்ளர் செய்தது. டாப் ஆர்டர் அனைவரும் சொதப்ப, ஸ்ரீகர் பரத் மட்டும் தனியாளாக 70 ரன்களை அடித்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி 33 ரன்களுக்கெல்லாம் அவுட்டானார். ஆனால் அவரின் விக்கெட் தான் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

விக்கெட் சர்ச்சை

விக்கெட் சர்ச்சை

ஆட்டத்தின் 37வது ஓவரில் லெய்செஸ்டர்சையர் அணி பவுலர் அபிடின் சகாண்டே வீசிய வைட் ஆஃப் சைட் பந்தை விராட் கோலி கவர் ட்ரைவ் அடிக்க முயன்றார். ஆனால் பந்து மிஸ்ஸாகி கோலியின் பேடில் பட்டு ஸ்லிப் திசையில் கேட்ச்சாக மாறியது. இதனையடுத்து எதிரணி வீரர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

அம்பயரின் யோசனை

அம்பயரின் யோசனை

கோலியின் விக்கெட் குறித்து நீண்ட நேரம் சிந்தித்து வந்த கள நடுவர் இறுதியில் அவுட் கொடுத்தார். எனினும் விராட் கோலிக்கு ஒன்றுமே புரியவில்லை. தனக்கு எல்.பி.டபள்யூ முறையில் அவுட் கொடுக்கப்பட்டதா? அல்லது கேட்ச்-காக அவுட் கொடுத்தனரா என்று தெரியாமல் அவரும் தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

கம்பேக் தரும் கோலி?

கடந்த 2018ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக சிறப்பாக விளையாடியிருந்த விராட் கோலி, தற்போது அதே தொடர் மூலம் கம்பேக் கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கேற்றார் போலவே பயிற்சி போட்டியில் கவர் ட்ரைவ், சிக்ஸர், ஸ்ட்ரைட் ட்ரைவ் என எந்தவித தயக்கமும் இன்றி அடித்தார். முதல் இன்னிங்ஸில் 69 பந்துகளை சந்தித்த அவர் 4 பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸருடன் 33 ரன்களை எடுத்தார்.

Story first published: Friday, June 24, 2022, 17:36 [IST]
Other articles published on Jun 24, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+