
2வது டெஸ்ட் போட்டி
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையில் நடந்து முடிந்துள்ள 2வது டெஸ்ட் போட்டி பல்வேறு தரப்பினரையும் மகிழ்ச்சி கொள்ள செய்துள்ளது. ரஹானே தலைமையிலான இந்திய அணி சிறப்பாக விளையாடி இந்த வெற்றியை சாத்தியப்படுத்தியுள்ளது. இதையடுத்து பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகன்றனர்.

நிறைவான வெற்றி
இரண்டு டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே இதுவரை கேப்டன் பொறுப்பை வகித்துள்ள அஜிங்க்யா ரஹானே வீரர்களை இந்த போட்டியில் சிறப்பாக பயன்படுத்திய விதம் அனைவரையும் ஆச்சர்யத்திற்கு உள்ளாக்கியுள்ளது. இந்த வெற்றி மேலும் அடுத்தடுத்த இரு போட்டிகளிலும் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரசிகர்கள் எதிர்பார்ப்பு
கடந்த 2018 -19ல் இந்திய அணி ஆஸ்திரேலிய மண்ணில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி டெஸ்ட் தொடரை வெற்றி கொண்டது. அந்த வரலாறு மீண்டும் தொடருமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது. தன்னுடைய கேப்டன்ஷிப்பையும் முன்னாள் வீரர்களின் அறிவுறுத்தல்களையும் ரஹானே கடைபிடித்தால் இது சாத்தியமாகும்.

விராட் கோலி பாராட்டு
இந்நிலையில் இந்திய வீரர்களின் இந்த வெற்றி குறித்து கேப்டன் கோலி தனது டிவிட்டர் பக்கத்தில் பாராட்டு தெரிவித்துள்ளார். தன்னுடைய குழந்தை பிறப்பிற்கென பகலிரவு போட்டியில் மட்டுமே விளையாடிவிட்டு நாடு திரும்பியுள்ள அவர், அணி வீரர்களின் ஆட்டம் வியப்பை ஏற்படுத்தியதாக கூறியுள்ளார். குறிப்பாக ரஹானேவின் கேப்டன்ஷிப் குறித்தும் அவர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

ஸ்ரீகாந்த் சூசகம்
கேப்டன் விராட் கோலியிடம் இல்லாத பொறுமை உள்ளிட்ட குணங்கள் அஜிங்க்யா ரஹானேவிடம் உள்ளதாகவும் அணியை அவர் சிறப்பாக வழிநடத்துவதாகவும் பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். அடுத்த கேப்டனாகும் திறமை அவருக்கு உள்ளதாகவும் தேர்வாளர்கள் இதுகுறித்து யோசிப்பார்கள் என்றும் கடந்த வாரத்தில் முன்னாள் கேப்டன் ஸ்ரீகாந்த் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications