தன்னம்பிக்கையை அதிகரிக்க விராட் கோலி செய்த காரியம்... சிராஜ் உற்சாகம்
தன்னுடைய தன்னம்பிக்கையை அதிகரிக்கும்வகையில் ஆர்சிபி கேப்டன் விராட் கோலி செய்த செயலுக்கு முகமது சிராஜ் நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளார்.
நேற்றைய கேகேஆர் அணிக்கு எதிரான போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது ஆர்சிபி.
இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த சிராஜ், தன்மீது நம்பிக்கை வைத்து புது பந்தை கொடுத்து பௌலிங் செய்ய வைத்த விராட்டின் செயல் தனக்கு நம்பிக்கையை அளித்ததாக தெரிவித்துள்ளார்.

ஆர்சிபி அபார வெற்றி
ஆர்சிபி மற்றும் கேகேஆர் அணிகளுக்கிடையில் நடைபெற்ற நேற்றைய போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆர்சிபி அபார வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியில் 8 ரன்களை மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை அடுத்தடுத்து எடுத்ததுடன் 2 மேட்-இன் ஓவர்களையும் போட்டுள்ளார் சிராஜ்.

பௌலிங் அளித்த விராட்
இந்நிலையில், தன்மீது நம்பிக்கை வைத்து புதிய பந்தை தனக்கு அளித்து பௌலிங் செய்ய வைத்த விராட் கோலிக்கு நன்றி தெரிவித்துள்ள சிராஜ், இதன்மூலம் தன்னுடைய தன்னம்பிக்கை அதிகரித்ததாக தெரிவித்துள்ளார். மோரீஸ் முதல் ஓவரை போட்டவுடன் டீ வில்லியர்சுடன் ஆலோசனை மேற்கொண்டு தனக்கு விராட் பௌலிங்கை அளித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

3வது பந்தில் முதல் விக்கெட்
முதலில் தான் இந்த அளவிற்கு ஸ்விங் செய்வேன் என்று எதிர்பார்க்கவில்லை என்றும் தொடர்ந்து தன்னுடைய முழு வலிமையை செலுத்தி பௌலிங் செய்ததாகவும் அதையும் மிகவும் என்ஜாய் செய்து செய்ததாகவும் சிராஜ் கூறியுள்ளார். ஆர்சிபி டிவிட்டர் பக்கத்தில் பேசிய அவர் இதனை தெரிவித்துள்ளார். இரண்டாவது ஓவரை போட்ட சிராஜ், 3வது பந்திலேயே, ராகுல் திரிபாதியை பெவிலியனுக்கு அனுப்பினார்.

சிராஜ் சாதனை
தொடர்ந்து பௌலிங் செய்த சிராஜ், அடுத்த பந்திலேயே, நிதீஷ் ரானாவையும் அடுத்த ஓவரிலேயே டாம் பான்டனையும் அவர் அவுட் ஆக்கினார். மேலும் 2 மேட் -இன் ஓவர்களையும் போட்டு சாதனை புரிந்துள்ளார். இந்நிலையில் ஆர்சிபி குழுவாக செயல்பட்டு வருவதாக விராட் கோலி தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications