வாழ்க்கையை மாற்றிய ஷாம்பூ விளம்பரம்.. மறக்காமல் நன்றி சொல்லும் கோலி!
Recommended Video
மும்பை : தன்னுடைய வாழ்க்கையை மாற்றிய ஷாம்பூ விளம்பரம் குறித்து இந்திய கிரிக்கெட் கேப்டன் விராத் கோலி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். தான் முதன்முதலில் அனுஷ்காவை சந்தித்த போது அவர் ரிலாக்சாக தன்னுடைய வேலையை செய்ததுடன் தன்னுடைய பதற்றத்தையும் தணித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2017 டிசம்பர் மாதத்தில் இத்தாலியில் திருமணம் செய்து கொண்ட விராத் கோலி மற்றும் அனுஷ்கா தம்பதியினர், இந்தியாவில் மட்டுமல்ல உலக அளவில் சிறந்த தம்பதிகளாக போற்றப்படுகின்றனர்.
தங்களது திருமணத்திற்கு முன்பு 4 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த இந்த தம்பதி, மனமொத்து தங்களது உறவை திருமணத்தில் முடித்து, தற்போது, தங்களது வாழ்க்கையை கொண்டாடி வருகின்றனர். தான் முதன்முதலில் அனுஷ்காவை சந்திக்க காரணமாக இருந்த ஷாம்பூ விளம்பரத்திற்கு எப்போதுமே நன்றி தெரிவித்து வருகிறார் விராத்.

பாலிவுட் நடிகையை திருமணம் செய்த விராத்
ஒவ்வொரு மனிதனுக்கும் தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை சிறப்பாக இருந்தால் மட்டுமே அவர்கள் சார்ந்துள்ள வேலையில் அவர்கள் பிரகாசிக்க முடியும். அந்த வகையில், பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மாவை திருமணம் செய்துள்ள விராத் கோலி, தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையிலும் சிறந்து விளங்குகிறார்.

ஆதர்ஷ தம்பதி
கடந்த 2017 டிசம்பரில் இந்த ஜோடி இத்தாலியில் பிரமாண்ட அளவில் தங்களது திருமணத்தை செய்து கொண்டனர். அதற்கு முன்பாக 4 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த இவர்கள், திருமணம் செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

விராத் கோலி நெகிழ்ச்சி
பல்வேறு விளம்பரங்களில் நடித்துவரும் விராத் கோலி, அனுஷ்காவை முதன்முதலில் சந்தித்தது, ஷாம்பூ விளம்பரம் ஒன்றிற்கான படப்பிடிப்பில்தான். இதற்காக அவர் தன்னுடைய பேட்டிகளில் எப்போதும் அந்த ஷாம்பூ விளம்பரத்திற்கு நன்றி தெரிவித்து வருகிறார்.

விராத்தை கவர்ந்த அனுஷ்கா
அந்த ஷாம்பூ விளம்பரத்தில் நடிப்பதற்காக தனக்கு முன்பாகவே செட்டிற்கு வந்த அனுஷ்கா, ரிலாக்சாக தன்னை வரவேற்று தன்னுடைய பதற்றத்தையும் தணித்ததாக விராத் தெரிவித்துள்ளார். இதன்மூலம் அந்த விளம்பரம் மிக அழகாக வந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முதிர்ச்சியாக செயல்படுவதாக மகிழ்ச்சி
பாலிவுட் நடிகையாக மட்டுமின்றி தயாரிப்பாளராகவும் விளங்கி வருகிறார் அனுஷ்கா சர்மா. அவர் முன்பை விட தன்னை மிகவும் பொறுப்பானவனாகவும் முதிர்ச்சியுடன் நடந்து கொள்ளவும் செய்ததாக தொடர்ந்து புகழ்பாடி வருகிறார் விராத் கோலி. இதன்மூலம் இவர்கள் மனம் ஒத்த ஆதர்ஷ தம்பதிகளாக மற்றவர்களுக்கு உதாரணமான வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications