Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கோஹ்லியை எதிர்த்து பேசும் ஒரு ஆள் தேவை.. விட்டு விளாசிய கிரேம் ஸ்மித்

Recommended Video

கோஹ்லி இன்னும் வளரனும் - கிரேம் ஸ்மித் சாடல்- வீடியோ

டெல்லி: இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி ஒரு கேப்டனாக இன்னும் வளர வேண்டியுள்ளது என்று, தென் ஆப்பிரிக்க முன்னாள் கேப்டன் கிரேம் ஸ்மித் விளாசியுள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் கவாஸ்கருடன், டிவி நிகழ்ச்சியில் பங்கேற்ற ஸ்மித் அப்போது கூறிய கருத்துக்கள் கோஹ்லியை கடுமையாக சாடுவதாக இருந்தன.

இந்தியாவின் நீண்டகால கேப்டன் தேர்வாக கோஹ்லி இருக்க முடியாது என்றே கருதுகிறேன் என்று வெளிப்படையாகவே தெரிவித்தார் ஸ்மித்.

கோஹ்லி ஒளிவட்டம்

கோஹ்லி ஒளிவட்டம்

கிரேம் ஸ்மித் கூறியதாவது: கோஹ்லி தன்னை சுற்றிலும் ஒரு ஒளிவட்டத்தை ஏற்படுத்திக்கொண்டுள்ளார். சர்வதேச அளவிலும், இந்திய அளவிலும் அவர் ஒரு முன்னணி வீரர் என்பதை மறுக்க முடியாது. ஆனால், தன்னைப்போலவே அணியையும் முழு திறமை கொண்டதாக மாற்ற வேண்டியது கேப்டன் பொறுப்பு. அணியில் கோஹ்லி அவரது விருப்பப்படி முடிவுகளை எடுத்து வருவதாகவே தெரிகிறது.

எதிர்க்கும் பயிற்சியாளர் தேவை

எதிர்க்கும் பயிற்சியாளர் தேவை

இந்திய அணிக்கு பல்வேறு வாய்ப்புகள் உள்ளன என்பதை கோஹ்லிக்கு எடுத்துக்கூறும் வகையில் ஒரு பயிற்சியாளர் தேவை. கோஹ்லியிடம் சண்டை போட வேண்டும் என கூறவில்லை. அவருக்கு பக்குவமாக எடுத்துக் கூறி முன்னால் உள்ள வாய்ப்புகளை எடுத்துக்கூறும் நபர் தேவை. இதன் மூலம், கோஹ்லியை ஒரு சிறந்த கேப்டனாக மாற்ற முடியும்.

கோஹ்லி உணர வேண்டும்

கோஹ்லி உணர வேண்டும்

கோஹ்லி டெக்னிக்கலாக மிச்சிறந்த பேட்ஸ்மேன். தனது திறமையை அவர் நன்கு உணர்ந்துள்ளார். பிற வீரர்களுக்கும் அவரே தரத்தை நிர்ணயிக்கிறார். கேப்டன் செயல்பாடுகள் பிறருக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை உணர்ந்து கோஹ்லி செயல்பட வேண்டும்.

கோஹ்லி திணறல்

கோஹ்லி திணறல்

உள்நாட்டு பாதுகாப்பு சூழலில் இருந்து வெளிநாட்டுக்கு வரும் போது அவர் நெருக்கடியைச் சந்திக்க வேண்டிய சூழல்கள் வரும். செய்தியாளர்கள் சந்திப்பை கோபப்படாமல் எதிர்கொள்ள வேண்டிவரும். அணியாக ஒட்டுமொத்தமாக பார்மைக் கண்டுபிடிக்க இப்போதுவரை கோஹ்லி திணற வேண்டியுள்ளது என்பதை கவனிக்க முடிகிறது என்றார் கிரேம் ஸ்மித்.

கூல் கேப்டன் டோணி

கூல் கேப்டன் டோணி

நிகழ்ச்சியில் பேசிய கவாஸ்கரும் இதை வழிமொழிந்தார். அதேநேரம் ஸ்மித் அளவுக்கு கடுமை காட்டவில்லை. கோஹ்லி தனது அணியினருடன் கூடுதல் பிணைப்பை ஏற்படுத்த வேண்டும் என்றார். டோணியின் கேப்டன்ஷிப்பை கவாஸ்கர் பெருமையுடன் நினைவுகூர்ந்தார். இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, கோஹ்லி சொல்படி கேட்டு நடக்கிறார் என்ற விமர்சனங்கள் எழுவது குறிப்பிடத்தக்கது.

Story first published: Tuesday, January 23, 2018, 16:13 [IST]
Other articles published on Jan 23, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+