Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

விராட் கோலியிடம் பெரிய மைனஸ் இருக்கு.. டெஸ்ட் போட்டியில் இதை வளர்த்து கொள்ளுங்கள்.. EX-வீரர் கருத்து

மும்பை : இந்திய கிரிக்கெட் அணியில் நட்சத்திர வீரர் விராட் கோலி தற்போது லண்டனில் இருந்து வருகிறார். இந்திய அணி அடுத்த இரண்டு மாதத்தில் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட போகிறது. அது மட்டுமல்லாமல் வரும் நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

இந்த தொடர்களில் எல்லாம் இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என்றால் விராட் கோலியின் பங்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த சூழலில் நட்சத்திர வீரர்கள் பலரும் துலீப் கோப்பை தொடரில் விளையாடுகின்றனர்.

india vs bangladesh ind vs ban cricket virat kohli

ரோகித் சர்மா தனியாக பயிற்சி மேற்கொண்டு வருகிறார். ஆனால் விராட் கோலி எந்த ஒரு பயிற்சியும் ஈடுபடாமல் தற்போது இங்கிலாந்தில் தனது மனைவியுடன் பொழுதை கழித்து வருகிறார். இந்த சூழலில் விராட் கோலிக்கு மிகப்பெரிய ஒரு மைனஸ் பாயிண்ட் இருப்பதாகவும், அது வங்கதேச தொடரில் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் பிரக்யான் ஓஜா தெரிவித்துள்ளார்.

விராட் கோலி கடந்த நான்கு ஆண்டுகளாக இடது கை சுழற் பந்து வீச்சாளர்களுக்கு எதிராக தடுமாறி வருகிறார். டெஸ்ட் கிரிக்கெட்டில் இடது கை சுழற் பங்குவீச்சாளர்களுக்கு எதிராக அவருடைய சராசரி வெறும் 30 என்ற அளவில் தான் இருக்கிறது. இந்த சூழலில் வங்கதேச அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் விளையாடுகிறது.

இதில் சாகிபுல் ஹசன், தைஜூல் இஸ்லாம் என்ற இரண்டு இடது கை சுழற் பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பிரக்யான் ஓஜா, விராட் கோலி குறித்து நாம் பேசப் போகிறோம் என்றால் அவர் சர்வதேச கிரிக்கெட்டில் 10 ஆண்டுகளுக்கு மேல் விளையாடி இருக்கிறார் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

ஒவ்வொரு வீரருக்கும் ஒவ்வொரு நேரத்தில் ஒவ்வொரு சவால்கள் வரும். இந்த சவால்களைக் கடக்க ஒவ்வொரு வீரர்களும் தங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். கிரிக்கெட்டில் இதுவரை சாதித்த வீரர்களை எல்லாம் நீங்கள் பார்த்தீர்கள் என்றால் அவர்கள் தங்களை தாங்களே மெருகேற்றிக் கொள்வார்கள். இதே போல் விராட் கோலி ஏற்றுக் கொள்வார் என்று நம்புகிறேன்.

விராட் கோலி மட்டுமல்ல இதற்கு முன்பு பல ஜாம்பவான்கள் பல சவால்களை சந்தித்து வெற்றி பெற்றிருக்கிறார்கள். இதே போல் விராட் கோலியின் இடது கை சுழற்சி அளவுக்கு எதிராக தனது குறையை நிவர்த்தி செய்வார் என்று நம்புகிறேன். விராட் கோலி எப்போதுமே தன்னுடைய பெஞ்ச் மார்க்கை அதிகப்படுத்தி வைத்திருக்கிறார். இதனால் அவர் 50, 60 ரன்கள் அடித்தாலே ரசிகர்கள் அவர் சரியாக விளையாடவில்லை என்று தான் பார்ப்பார்கள்.

அந்த அளவுக்கு விராட் கோலி அதிக ரன்கள் குவித்து இருக்கிறார். எனவே விராட் கோலி கடும் பயிற்சி மேற்கொண்டால் நிச்சயம் இடது கை சுழற்பந்துவீச்சுக்கு எதிரான தனது மைனஸை அவர் நிவர்த்தி செய்து கொள்வார் என்று தாம் நம்புகிறேன் என்று பிரக்யான் ஒஜா கூறியுள்ளார். அண்மையில் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி, இரண்டு டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்று தொடரை வென்று உள்ளது. தற்போது இந்தியா வந்து இரண்டு டெஸ்டில் வங்கதேச அணி விளையாடுகிறது. இதனால் அந்த அணியை குறைத்து மதிப்பிட முடியாது.

Story first published: Sunday, September 8, 2024, 9:49 [IST]
Other articles published on Sep 8, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+