ஐபிஎல்லுல சரியா செய்யலன்னா கேப்டன்ஷிப்ப மாத்தணுமா... கம்பீரின் கருத்துக்கு ஆகாஷ் சோப்ரா பதிலடி!
டெல்லி : ஐபிஎல் 2020 தொடரில் ப்ளே -ஆப் சுற்றுவரை வந்த விராட் கோலி தலைமையிலான ஆர்சிபி அணி தோல்வியை சந்தித்தது.
ஆனால் ரோகித் சர்மாவின் தலைமையில் மும்பை இந்தியன்ஸ் அணி 5வது கோப்பையை வெற்றி கொண்டுள்ளது. இதையடுத்து டி20 கேப்டன்ஷிப்பை ரோகித்திடம் அளிக்க வேண்டும் என்று முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் கூறியுள்ளார்.
இந்நிலையில், இந்திய அணிக்காக கேப்டன் கோலி சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும் மாற்றத்திற்கு அவசியம் இல்லை என்றும் முன்னாள் வீரரும் கிரிக்கெட் விமர்சகருமான ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.

ரோகித் தலைமையில் 5வது வெற்றி
ஐபிஎல் 2020 சீசனில் விராட் கோலி தலைமையிலான ஆர்சிபி அணி ப்ளே -ஆப் சுற்றிலேயே வெளியேறியது. இதுவரை அந்த அணி ஒரு கோப்பையைகூட கைப்பற்றவில்லை. இந்நிலையில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி இந்த சீசனில் கோப்பையை கைப்பற்றி 5வது வெற்றியை பெற்றுள்ளது.

ரோகித்திற்கு வழங்க வேண்டும்
இதையடுத்து டி20 வடிவத்தின் கேப்டன் பொறுப்பை விராட் கோலியிடம் இருந்து ரோகித் சர்மாவிற்கு கைமாற்றும் நேரம் வந்துள்ளதாக முன்னாள் துவக்க வீரர் கவுதம் கம்பீர் தெரிவித்திருந்தார். விராட் கோலி ஐபிஎல்லில் தன்னுடைய அணியை திறம்பட நடத்த தவறிவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

ரோகித் சர்மா பெஸ்ட்
ஸ்டார் ஸ்போர்ட்சின் கிரிக்கெட் கனெக்டட் நிகழ்ச்சியில் பேசிய கம்பீர், விராட் கோலி மோசமான கேப்டன் என்று தான் கூறவில்லை என்றும் ஆனால் சிறப்பான கேப்டன் என்று பேச முற்பட்டால் ரோகித் சர்மாதான் பெஸ்ட் என்றும் அவர் தெரிவித்துள்ளார். கோலி மற்றும் ரோகித்திற்கு இடையில் அதிகமான வித்தியாசங்கள் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஆகாஷ் சோப்ரா மறுப்பு
இந்நிலையில் கம்பீரின் கருத்துக்களுக்கு மறுப்பு தெரிவித்த முன்னாள் வீரர் மற்றும் கிரிக்கெட் விமர்சகர் ஆகாஷ் சோப்ரா, ஐபிஎல் செயல்பாடுகளை கருத்தில் கொள்ள வேண்டியது முக்கியம்தான் என்றும் ஆனால், இந்தய அணிக்காக கோலி சிறப்பான பல செயல்பாடுகளை செய்துள்ளதை கருத்தில் கொள்ள வேண்டியது முக்கியம் என்றும் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications