Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆட்டத்தில் கவனம் வைக்காமல் அனுஷ்கா ஷர்மாவுடன் நள்ளிரவில் ஊர் சுற்றிய கோஹ்லி

மெல்போர்ன்: இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. இதில் அடிலெய்டு, பிரிஸ்பேன் டெஸ்டுகளில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.இந்த நிலையில் இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி மெல்போர்ன் நகரில் நேற்று தொடங்கியது.

ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுடன், மனைவிகளை தங்க அனுமதி அளித்து இருக்கும் இந்திய கிரிக்கெட் வாரியம், காதலியை ஒரே அறையில் தங்க வைக்க தடை தொடரும் என்று தெரிவித்துள்ளது.

Virat Kohli to have Anushka for company at boxing day test at MCG

இந்நிலையில் பாலிவுட் நடிகையான அனுஷ்கா ஷர்மா தனது காதலர் விராட் கோஹ்லியை சந்திக்க முடிவு செய்தார். கோஹ்லி தற்போது மெல்போர்ன் நகரில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடி வருகிறார். எனவே காதலனை பார்ப்பதற்காகவே அனுஷ்கா மெல்போர்ன் நகருக்கு சென்றுள்ளார்.

நேற்று, முதல் நாள் ஆட்டம் முடிந்தபின்னர் விராட் கோஹ்லி, மெர்ல்போர்னில் அனுஷ்கா ஷர்மா தங்கியிருந்த ஹோட்டலுக்கு சென்றதாகவும், இரவு முழுவதும் இருவரும் மெல்போர்ன் சாலையை சுற்றி வந்ததாகவும் கூறப்படுகிறது. இது குறித்த புகைபடங்கள் இனையதளத்தில் பரவியுள்ளது.

மேலும் இவர்களை மெல்போர்ன் சாலையில் பார்த்த ஒருவர் புகைப்படம் எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

மறுநாள் போட்டியில் விளையாட உள்ள நிலையில் இரவு முழுவதும் நடிகையுடன் ஊர்சுற்றிய விராட் கோஹ்லி மீது கிரிக்கெட் நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா? என்பதே அனைவரின் கேள்வியாக உள்ளது.

இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது விராட் கோஹ்லி தனது காதலி அனுஷ்காவுடன் ஜோடியாக பல இடங்களில் சுற்றி திரிந்தார். அந்த தொடரின்போது, அவரது பேட்டிங் திறமை பாதிக்கப்பட்டு கடும் விமர்சனத்துக்கு உள்ளானார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Saturday, December 27, 2014, 12:09 [IST]
Other articles published on Dec 27, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+