ஒரே தொடரில் பல பிரமாண்ட சாதனைகள்.. விராட் கோலி முன் காத்திருக்கும் வாய்ப்பு.. சச்சினை முந்துவாரா??
மும்பை: ஆஸ்திரேலிய அணியுடனான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய வீரர் விராட் கோலி பல பிரமாண்ட சாதனைகளை படைக்கவுள்ளார். குறிப்பாக சச்சின், பாண்டிங் சாதனைகளை முறியடிக்கவும் வாய்ப்புகள் உள்ளன.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடர் இண்று முதல் தொடங்கவுள்ளது. முதல் போட்டி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மதியம் 2 மணிக்கு தொடங்குகிறது.
இந்த போட்டியில் நட்சத்திர வீரர் விராட் கோலி மீது தான் அதிக எதிர்பார்ப்புகள் உள்ளன. ரசிகர்கள் எதிர்பார்த்தபடியே அனைத்து வடிவ கிரிக்கெட்டிலும் சதங்களை அடித்து மீண்டும் பழைய ஃபார்முக்கு திரும்பியுள்ளார்.

ஆஸ்திரேலிய தொடர்
டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் சதமடித்த கோலி, சமீபத்தில் நடந்து முடிந்த பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரிலும் சதமடித்திருக்கிறார். எனவே உச்சகட்ட ஃபார்முடன் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இன்று களமிறங்குகிறார். இந்நிலையில் அவரின் கண் எதிரே பல சாதனைகள் காத்துள்ளனர். இந்த முதல் போட்டியில் இன்னும் 48 ரன்களை அடித்துவிட்டால் போதும், சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் சொந்த மண்ணில் அதிக ரன்களை அடித்த வீரர்கள் பட்டியலில் பாண்டிங்கை முந்துவார்.

புள்ளிப்பட்டியல்
ரிக்கிப் பாண்டிங் சொந்த மண்ணில் 153 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 5,406 ரன்களை குவித்துள்ளார். விராட் கோலி 107 போட்டிகளில் விளையாடி 5,348 ரன்களை சேர்த்திருந்தார். இன்னும் 48 ரன்கள் அடித்தால் முந்திவிடுவார். இந்த பட்டியலிலும் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தான் முதலிடத்தில் இருக்கிறார். அவர் 164 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 6976 ரன்களை குவித்திருக்கிறார்.

புதிய மைல்கல்
கோலி இன்னும் 191 ரன்களை அடித்தால் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 13,000 ரன்களை எட்டுவார். சர்வதேச அளவில் இந்த மைல்கல்லை எட்டும் 5வது வீரர் என்ற பெருமையை கோலி பெறுவார். இதற்கு முன்பு சச்சின் டெண்டுல்கர், குமார் சங்ககாரா, ரிக்கிப் பாண்டிங், சனத் ஜெயசூர்யா ஆகியோர் செய்துள்ளனர்.

இறுதிகட்ட சாதனை
இதே போல ஒருநாள் கிரிக்கெட்டில் சச்சினின் சாதனைக்கு அருகிலும் நெருங்கிவிட்டார். சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் விராட் கோலி 46 சதங்களை அடித்துள்ளார். சச்சின் டெண்டுல்கர் 49 சதங்களை அடித்துள்ளார். இந்த தொடரை பயன்படுத்தி சச்சின் இடத்திற்கு அருகில் கோலியால் நெருங்கிவிடுவார். மும்பை ஆடுகளம் பேட்ஸ்மேன்களின் சொர்க்கமாக இருக்கும் என்பதால் முதல் போட்டியிலேயே சதத்தை பார்க்க அதிக வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications