Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

என்னை மோசமான கேப்டன் என முத்திரை குத்தினாங்க.. விராட் கோலி கொடுத்த பதிலடி.. முழு விவரம்

பெங்களூரு : இந்திய அணியின் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்ட விவகாரம் குறித்து நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராட் கோலி முதல் முறையாக தனது மௌனத்தை கலைத்துள்ளார்.

விராட் கோலி தலைமையில் இந்திய அணி எந்த ஒரு ஐசிசி கோப்பையையும் வெல்லவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் ஐபிஎல் தொடரில் விராட் கோலி எந்த ஒரு கோப்பையையும் கைப்பற்றவில்லை.

அதேசமயம் ஐந்து முறை ஐபிஎல் கோப்பையையும், ஆசிய கோப்பையையும் வென்ற ரோகித் சர்மாவை இந்திய அணி கேப்டனாக அப்போதைய தலைவர் கங்குலி முன்மொழிந்தார்.

கோப்பைக்காக விளையாடுகிறோம்

கோப்பைக்காக விளையாடுகிறோம்

தற்போது அனைத்து பிரச்சனைகளும் தீர்ந்து விராட் கோலி ஒரு சாதாரண வீரராக அணியில் தொடர்ந்து வருகிறார். இந்த நிலையில் rcb நிறுவனத்திற்கு விராட் கோலி அளித்த பேட்டியில் தாம் தோல்வி அடைந்த கேப்டன் என்று முத்திரை குத்தப்பட்டதற்கு விளக்கம் அளித்துள்ளார். இதை பாருங்கள் ஒவ்வொரு தொடரிலும் விளையாடுவதற்கு காரணமே அதனை வெல்ல வேண்டும் என்ற எண்ணத்திற்காக தான்.

2 இறுதி போட்டி

2 இறுதி போட்டி

நான் சாம்பியன்ஸ் கோப்பை 2017 ஆம் ஆண்டு தொடரிலும், 2019 உலகக்கோப்பை தொடரிலும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிகளும் மற்றும் 2021 டி20 உலக கோப்பையிலும் இந்திய அணிக்கு தலைமை தாங்கி இருக்கிறேன்.

இதில் இரண்டு முறை இறுதிப் போட்டிக்கு அணியை அழைத்து வந்திருக்கிறேன். ஆனால் நான் தோல்வியை தழுவிய கேப்டன் என்று என் மீது முத்திரை குத்தப்படுகிறது என்று சொல்லி சிரித்துக் கொண்டார்.

கலாச்சார மாற்றம்

கலாச்சார மாற்றம்

இதனை தொடர்ந்து பேசிய அவர் நான் என்னை எப்போதுமே அந்த கண்ணோட்டத்தில் மதிப்பிட்டது கிடையாது.ஒரு அணியாக நான் சாதித்ததும் அணியில் இருந்த கலாச்சார மாற்றத்தை கொண்டு வந்தது குறித்தும் நான் பெருமைப்படுகிறேன்.ஒரு தொடர் என்பது சில காலம் தான் நடக்கும். ஆனால் அணியில் இருந்த கலாச்சாரத்தை மாற்றியது நீண்ட காலம் வரை இருக்கும். தொடர்ந்து இது போன்ற கலாச்சாரத்தை மாற்றி சிறப்பாக விளையாடினால் நாம் தொடரை வெல்ல முடியும். உலகக் கோப்பையை நான் ஒரு வீரனாக வென்று இருக்கிறேன்.

வீரனாக வென்று இருக்கிறேன்

வீரனாக வென்று இருக்கிறேன்

சாம்பியன்ஸ் கோப்பையையும் நான் அணியில் ஒரு வீரனாக கைப்பற்றி இருக்கிறேன். டெஸ்டில் முதலிடம் பிடிக்கும் அணிக்கு வழங்கப்படும் கோப்பையை ஒரு வீரனாக 5 முறை வாங்கி இருக்கிறேன். இந்தக் கண்ணோட்டத்தில் இருந்து பார்த்தால் பல பேர் எந்த ஒரு உலகக் கோப்பையும் வெல்லாமல் இருந்திருக்கிறார்கள். உண்மையை சொல்ல வேண்டுமென்றால் நான் 2011 உலகக்கோப்பை வென்ற அணியில் இடம் பெற்றதற்கு மிகவும் அதிர்ஷ்டசாலி என நினைக்கிறேன்.

அதிர்ஷ்டசாலி

அதிர்ஷ்டசாலி

அந்த அணியில் நான் தேர்வு செய்யப்பட கடுமையாக உழைத்தேன். பல அதிகபட்ச ஸ்கோர்களை நான் விளாசினேன். இதன் பலனாக நான் உலகக்கோப்பை அணியில் இடம் பெற்றேன். டெண்டுல்கர் தனது ஆறாவது உலகக் கோப்பை தொடரில் விளையாடும்போது தான் முதல்முறையாக உலக கோப்பையை வென்றார். ஆனால் நான் முதல்முறையாக அணியின் இடம்பெற்ற உடனே உலக கோப்பையை வென்ற அணியை சேர்ந்தவன் என்ற பெருமையை பெற்றுள்ளேன். இது நிச்சயம் அதிர்ஷ்டம் தான் .தோனி தான் என்னை கேப்டனாக அடையாளப்படுத்தினார் என்று விராட் கோலி தெரிவித்துள்ளார்.

Story first published: Saturday, February 25, 2023, 16:52 [IST]
Other articles published on Feb 25, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+