தொடரும் சதங்கள்.. சச்சினை மிஞ்சிய விராட் கோஹ்லி.. 50-வது டெஸ்ட்டில் 14 வது சதம் !
விசாகபட்டினம்: இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோஹ்லி தனது 50வது டெஸ்ட் போட்டியில் 14 வது சதத்தை அடித்து அசத்தியுள்ளார்.
கோஹ்லி இதுவரை விளையாடியுள்ள 49 டெஸ்ட் போட்டிகளில் 13 சதம், 12 அரைசதம் உடபட 3643 ரன்கள் எடுத்துள்ளார். (சராசரி 46.11) . அதே போல் அவர் விளையாடியுள்ள 176 ஒரு நாள் போட்டியில் 26 சதம், 38 அரைசதம் உடபட 7,570 ரன்கள் (சராசரி 52.93, 'ஸ்டிரைக் ரேட்' 90.43) எடுத்துள்ளார்.

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் நேற்று தொடங்கியது. இது விராட் கோஹ்லிக்கு 50 வது டெஸ்ட் மேட்ச் ஆகும். இந்த டெஸ்டின் முதல் நாள் ஆட்டத்தில் விராட் சதத்தை கடந்து 151 ரன்களுடன் அவுட்டாகமல் உள்ளார். இது கோஹ்லியின் 14 வது டெஸ்ட் சதமாகும்.
கோஹ்லியின் சிறந்த டெஸ்ட் போட்டிகள்:
கோஹ்லியின் 13 டெஸ்ட் சதங்களில் 7, கடந்த 23 மாதங்களில் அடிக்கப்பட்டவை. இதில் இரண்டு முறை இரட்டை சதமும் விளாசியுள்ளார்.
2015 - தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக விளையாடிய போட்டியில் கோஹ்லி எடுத்த 88 ரன்கள் அணியின் வெற்றிக்கு பேருதவியாக இருந்தது.
2012, பெங்களூர் - நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் கோஹ்லி 103 & 51* ரன்கள் விளாசி அசத்தலாக வெற்றியை பெற உதவினார். இதில் போட்டி தொடரை 2-0 என்ற கணக்கில் இந்தியா வென்றது.
2013, ஜொகனஸ் பெர்க் - தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிராக போட்டியின் போது 119 & 96 எடுத்து அசத்தினார்.
சச்சினை மிஞ்சிய கோஹ்லி
சச்சின் விளையாடிய முதல் 50 டெஸ்ட் போட்டிகள் வெளிநாடுகளில் நடைபெற்றவை. அதில் 11 சதங்கள் மட்டுமே எடுத்துள்ளார். அதேநேரம், விராட் கோஹ்லி விளையாடிய 50 டெஸ்ட் போட்டிகளில் 14 சதங்கள் எடுத்துள்ளார்.


Click it and Unblock the Notifications