Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

'கால் செஞ்சுரி சதம்'.. கோஹ்லி புது சாதனை!

கான்பெரா: சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 25 (கால் செஞ்சுரி) சதங்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் 4வது இடத்தை இலங்கை முன்னாள் வீரர் குமார் சங்ககாராவுடன் பகிர்ந்து கொண்டார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கான்பெராவில் நடைபெற்ற 4வது ஒருநாள் போட்டியில் விராட் கோஹ்லி சதம் விளாசினார். கடந்த போட்டியிலும் அவர் சதம் விளாசிய நிலையில், அடுத்தடுத்த போட்டிகளில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கோஹ்லி செஞ்சுரி அடித்தார்.

Virat Kohli hits 25th ODI ton to set record, draws level with Kumar Sangakkara

170 போட்டிகளில் ஆடி 25வது சதத்தை பூர்த்தி செய்தார் கோஹ்லி. சர்வதேச அளவில் 25 சதங்கள் மற்றும் அதை தாண்டி விளாசியோர் மொத்தமே 4 பேர்தான். அப்பட்டியலில், 25 சதங்களுடன் 4வதாக இடம் பிடித்திருந்த குமார் சங்ககாராவுடன் கோஹ்லியும் இணைந்துள்ளார்.

சச்சின் டெண்டுல்கர் 463 போட்டிகளில் ஆடி 49 சதங்களுடன் இப்பட்டியலில் முதலிடத்திலுள்ளார். 375 போட்டிகளில் ஆடி 30 சதங்கள் விளாசிய ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ரிக்கி பாண்டிங் 2வது இடத்திலுள்ளார்.

445 போட்டிகளில் விளையாடி, 28 சதங்கள் விளாசிய இலங்கை முன்னாள் வீரர் சனத் ஜெயசூர்யா 3வது இடத்திலும், 404 போட்டிகளில் ஆடி 25 சதங்கள் அடித்த குமார் சங்ககாரா 4வது இடத்திலும் உள்ளனர்.

Story first published: Wednesday, January 20, 2016, 15:53 [IST]
Other articles published on Jan 20, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+