Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

விராட் கோலி 29 பந்துகளில் 50..லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் தொடர்ந்து 6வது அரைசதம்..விஜய் ஹசாரேவில் அபாரம்

பெங்களூர்: விஜய் ஹசாரே கோப்பை தொடரில் டெல்லி அணி இன்று குஜராத் அணியை பெங்களூரில் உள்ள பிசிசிஐ சிறப்பு மையத்தில் எதிர்கொண்டது. விஜய் ஹசாரே கோப்பை தொடரில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு திரும்பியுள்ள விராட் கோலி, விளையாடிய முதல் போட்டியிலே 83 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார்.

மேலும் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் 16 ஆயிரம் ரன்களை அதிவேகமாக தொட்ட சச்சினின் சாதனையும் முறியடித்தார். இந்த சூழலில் பெங்களூருவில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

Virat Kohli

இதனை அடுத்து களமிறங்கிய டெல்லி அணியில் பிரியாஸ் ஆர்யா ஒரு ரன்னிலும் அர்பித் ரானா 10 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர். இந்த சூழலில் விராட் கோலி ஆரம்பத்திலிருந்து அதிரடி காட்டி ரன்களை சேர்த்தார். பவுண்டரி, சிக்ஸர்கள் என பறக்க விட்ட அவர் 29 பந்துகளில் தன்னுடைய அரை சதத்தை பூர்த்தி செய்தார்.

இதன் மூலம் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் தொடர்ந்து ஆறாவது முறையாக 50 ரன்கள் விராட் கோலி அடித்தார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டி மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்று ஒரு நாள் போட்டி, விஜய் ஹசாரே தொடரில் தற்போது இரண்டு போட்டி என விராட் கோலி இந்த சாதனையை நிகழ்த்தி இருக்கின்றார்.

விராட் கோலி இந்த ஆட்டத்தில் சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 77 ரன்களில் ஆட்டம் இழந்தார். 61 பந்துகளை எதிர்கொண்ட விராட் கோலி 13 பவுண்டரி, ஒரு சிக்சர் என 126 ஸ்ட்ரைக் ரேட் வைத்திருந்தார். இதேபோன்று மற்றொரு நட்சத்திர வீரரான ரோகித் சர்மா முதல் போட்டியில் சதம் அடித்தார்.

ஆனால் இன்றைய ஆட்டத்தில் கோல்டன் டக் ஆகி ரசிகர்களை ஏமாற்றம் அடைய செய்தார். ரோகித் சர்மா முதல் பந்திலே ஃபுல் ஷாட் அடித்து சிக்ஸர் அடிக்க முற்பட்டபோது, பவுண்டரி லைனில் நின்று கொண்டிருந்த வீரர் பந்தை கேட்ச் பிடித்தார். இதனால் ரோகித் சர்மாவை பார்க்க வந்த ரசிகர்கள் மைதானத்தில் இருந்து வெளியேறி வருகின்றனர்.

Story first published: Friday, December 26, 2025, 10:51 [IST]
Other articles published on Dec 26, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+