மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி ஏற்கனவே டி20 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று விட்டார். இந்த நிலையில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டியில் மட்டும் விராட் கோலி கவனம் செலுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் விராட் கோலி எப்போது கிரிக்கெட்டிற்கு முழுமையாக முழுக்கு போடுவார் என்பது குறித்து அவரது ராசி கட்டங்கள் என்ன சொல்கிறது என்பதை தற்போது பார்க்கலாம். விராட் கோலியின் ராசி மற்றும் கட்டங்களை ஆராய்ந்து 2016 ஆம் ஆண்டு ஜோதிடர் ஒருவர் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு இருந்தார்.

அதில் விராட் கோலி குறித்து சொன்ன பல விஷயங்கள் சரியாக இருக்கிறது. கோலி 2016 மற்றும் 2017ஆம் ஆண்டுகளில் சிறந்த கிரிக்கெட் வீரராக விளங்குவார் என்றும் 2017 -18 ஆம் ஆண்டு இறுதியில் விராட் கோலிக்கு திருமணம் ஆகும் என்றும் அவர் கணித்திருந்தார். இதேபோன்று விராட் கோலிக்கு பிப்ரவரி 2018 ஆம் ஆண்டு முதல் செப்டம்பர் 2020 ஆம் ஆண்டு குழந்தை பாக்கியம் இருக்கும் என்றும் அந்த ஜோதிடர் தெரிவித்திருந்தார்.
இதேபோன்று செப்டம்பர் 2020 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை விராட் கோலி கிரிக்கெட் வாழ்க்கையில் சரிவை சந்திப்பார் என்றும் அதன் பிறகு மீண்டும் அவர் உச்சத்தை அடைவார் என்றும் அந்த ஜோதிடர் தனித்து இருந்தார்.இப்படி விராட் கோலி வாழ்க்கையில் இதுவரை அவர் கணித்த அனைத்தும் சரியாக நடைபெற்றிருக்கிறது.இந்த நிலையில் அந்த ஜோதிடர் இனி விராட் கோலி வாழ்க்கையில் என்ன நடக்கப் போகிறது என்று அதே பதிவில் போட்டிருக்கிறார்.
அதை தற்போது நாம் பார்க்கலாம். விராட் கோலி 2025 ஆம் ஆண்டு வரை கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடி ஜொலிப்பார் என்று அந்த ஜோதிடர் குறிப்பிட்டு இருக்கிறார்.இன்னும் விராட் கோலியின் கிரிக்கெட்டில் ஆகஸ்ட் 2025-ஆம் தேதி முதல் பிப்ரவரி 2027 ஆம் தேதி வரை கொஞ்சம் தடுமாற்றமான காலமாக இருக்கும் என்றும் அவ்வப்போது ரன்கள் அடிக்கும் வீரராக இருப்பார் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.
இதேபோன்று பிப்ரவரி 2027 ஆம் ஆண்டுக்கு பிறகு விராட் கோலியின் கிரிக்கெட் வாழ்க்கை மீண்டும் உச்சத்தை தொடும் என்றும் மார்ச் 2028 ஆம் தேதி மிகப்பெரிய சாதனை உடன் விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவார் என்றும் அவர் கூறியிருக்கிறார். இதனால் 2027 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் உலகக் கோப்பையில் விராட் கோலி வென்று சாதனை படைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.