Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

விராட் கோலிக்கு கொஞ்சம் கூட ஈகோ இல்ல.. லண்டன் வீட்டுக்கு இந்திய வீரர்களை அழைத்த கிங்

லண்டன்: இங்கிலாந்துக்கு எதிரான பரபரப்பான ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் தொடங்குவதற்கு இன்னும் சில நாட்களே இருக்கிறது. இந்த நிலையில், சமீபத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற முன்னாள் இந்திய கேப்டன் விராட் கோலி, தனது லண்டன் இல்லத்தில் அணியின் சில வீரர்களையும், ஊழியர்களையும் விருந்துக்கு அழைத்திருக்கிறார்.

ஜூன் 20 ஆம் தேதி லீட்ஸில் தொடங்கவிருக்கும் கடினமான சுற்றுப்பயணத்திற்கு முன்பு வீரர்கள் புத்துணர்ச்சி பெற வாய்ப்பாக இன்று ஓய்வு நாளாக அறிவிக்கப்பட்டது. இந்த சூழலில் நடந்த விருந்தில்,
கோலியின் வீட்டுக்கு புதிதாக நியமிக்கப்பட்ட டெஸ்ட் கேப்டன் ஷுப்மன் கில், விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனும் துணைக் கேப்டனுமான ரிஷப் பந்த், வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் மற்றும் சிலர் சென்றுள்ளனர்.

Virat kohli

இந்திய அணி வீரர்கள் மற்றும் தேசிய அணியைச் சேர்ந்த நண்பர்களுடன் நேரத்தை செலவிட்டு பேசினார். இதில், சுப்மன் கில் மற்றும் ரிஷப் பண்ட் உடன் தனது அனுபவத்தை விராட் கோலி பேசியதாக தெரிகிறது. குறிப்பாக, கோலி இங்கிலாந்து மண்ணில் இந்திய அணியை டெஸ்ட் போட்டியில் வழிநடத்தி இருக்கிறார். இதனால் தனது அனுபவத்தை அவர் பகிர்ந்ததாக தெரிகிறது,

123 டெஸ்ட் போட்டிகளில் 68 இல் கேப்டனாக இருந்த கோலி, இங்கிலாந்தில் மூன்று வெற்றிகளுடன் இந்தியாவின் மிகவும் வெற்றிகரமான டெஸ்ட் கேப்டனாக உள்ளார். டெல்லியைச் சேர்ந்த இவர், லண்டனில் நடைபெறவிருக்கும் மூன்றாவது டெஸ்ட் லார்ட்ஸ் மற்றும் ஐந்தாவது டெஸ்ட் தி ஓவல் போட்டிகளில் அணிக்கு ஆதரவளிக்க மைதானத்திற்கு செல்லலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இருக்கலாம்.
இதனிடையே கில் தற்போது முதல் முறையாக டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை வழிநடத்துகிறார். ஏற்கனவே 2024 இல் ஜிம்பாப்வே சுற்றுப்பயணத்தில் கில் இந்திய டி20 அணியை வழிநடத்தியிருந்தார். 32 டெஸ்ட் போட்டிகளில் 1893 ரன்கள், 35.05 சராசரியுடன் விளையாடிய கில், இங்கிலாந்தில் மூன்று போட்டிகளில் வெறும் 88 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.

கென்ட் கிரிக்கெட் மைதானத்தில் ஒரு வாரம் பயிற்சி செய்த பிறகு, பயணிக்கும் இந்திய அணி, முதல் டெஸ்ட் நடைபெறவிருக்கும் லீட்ஸில் உள்ள ஹெடிங்லி மைதானத்தில் நாளை முதல் பயிற்சியை தொடங்கவுள்ளது. லீட்ஸின் ஹெடிங்லியில் முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் சராசரி 298 ஆக இருக்கும் நிலையில், இரு அணிகளும் முதல் இன்னிங்சில் முன்னிலை பெற முயலும்.

Story first published: Tuesday, June 17, 2025, 18:46 [IST]
Other articles published on Jun 17, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+