Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

புதுசு புதுசா கிளப்பி விடுறீங்களேப்பா! இம்ரான் கான் மாதிரியே செயல்படுகிறாராம் கேப்டன் கோலி!

Recommended Video

இம்ரான் கான் போலவே கோலி: அப்துல் காதிர்- வீடியோ

இஸ்லாமாபாத் : இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி, பாகிஸ்தானின் ஜாம்பவான் வீரர் இம்ரான் கான் போல தலைமைப் பண்பில் நடந்து கொள்வதாக கூறியுள்ளார் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் அப்துல் காதிர்.

இரண்டு வெவ்வேறு தலைமுறை வீரர்களிடையே ஒப்பீடுகள் தேவையா என்ற கேள்வி எழுந்தாலும், யாரும் இதை நிறுத்தப் போவதில்லை. சச்சினோடு பலரும் கோலியை ஒப்பிட்டு பேசிய நிலையில், தற்போது அப்துல் காதிர் இம்ரான் கானுடன் எப்படி ஒப்பிட்டு பேசியுள்ளார்?

இம்ரானுடன் ஒப்பீடு

இம்ரானுடன் ஒப்பீடு

இம்ரான் கான் பாகிஸ்தான் அணியின் கேப்டனாக இருந்த போது எப்படி அணியை வழி நடத்திச் சென்றாரோ அதே போலவே கோலியும் தற்போதைய இந்திய அணியை வழி நடத்துகிறார் என குறிப்பிட்டுள்ளார் அப்துல் காதிர்.

பிரதமரான இம்ரான்

பிரதமரான இம்ரான்

தற்போது விராட் கோலி பேட்டிங்கிலும், கேப்டன்சியிலும் வெற்றி நடை போட்டு வருகிறார். அதே சமயம், இம்ரான் கான் முன்னாள் கிரிக்கெட் வீரர் என்ற அடையாளத்தில் இருந்து மாறி தற்போது பாகிஸ்தான் நாட்டின் பிரதமர் என்ற உயரத்திற்கு சென்றுள்ளார்.

இம்ரான் போல கோலி

இம்ரான் போல கோலி

இந்த நேரத்தில் தான் அப்துல் காதிர் இப்படி பேசி இருக்கிறார். அவர் கூறுகையில், "விராட் கோலி கேப்டனாகவும், பேட்ஸ்மேனாகவும் இம்ரான் கான் போலவே நடந்து கொள்கிறார். அவரே உதாரணமாக இருந்து அணியும் அந்த வழியில் செல்ல எதிர்பார்க்கிறார்" என்றார்.

பின்னர் சமாளிப்பு

பின்னர் சமாளிப்பு

கோலியை, தன் நாட்டின் பிரதமருடன் ஒப்பிட்டு பேசி விட்டோம் என நினைத்தோ, என்னவோ, பின்னர் அப்துல் காதிர் கவனமாக தான் ஒப்பிட்டு பேசவில்லை என்றும், இம்ரான் கான் அளவுக்கு கோலி இன்னும் வளரவில்லை என்றும் பேசி சமாளித்து உள்ளார்.

தேவையற்ற பேச்சு

தேவையற்ற பேச்சு

இம்ரான் கான், சச்சின் போன்ற ஜாம்பவான்கள் ஆடிய காலம் வேறு. அவர்கள் சந்தித்த சூழல் வேறு. இப்போது இருக்கும் காலம், சூழல் வேறு. இதை புரிந்து கொள்ளாமல் கோலி இம்ரான் போல இருக்கிறார், சச்சினை முந்தி விட்டார் என பேசுவது தேவையற்றது.

Story first published: Thursday, February 7, 2019, 18:11 [IST]
Other articles published on Feb 7, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+