Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

என்னாது? டயாப்பர் மாட்டிக் கொண்டு.. வெளுத்து வாங்கிய குட்டிப் பையன்.. மிரண்டு போன கோலி!

Recommended Video

சச்சின், கோஹ்லியை விஞ்சும் 3 வயது சிறுவனின் பேட்டிங்

மும்பை : ஒரு குட்டிப் பையன் கிரிக்கெட் ஆடும் வீடியோ ஒன்றை பகிர்ந்த முன்னாள் இங்கிலாந்து வீரர் கெவின் பீட்டர்சன், விராட் கோலியிடம் அந்த பையனை இந்திய அணியில் சேர்த்துக் கொள்ளுமாறு கூறினார்.

அந்த குட்டிப் பையன் ஸ்டைலான பேட்டிங் மற்றும் டைமிங்கில் அடித்த ஷாட்களை பார்த்து மிரண்டு போன விராட் கோலி, தன் வியப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

மைக்கேல் வாஹன் பகிர்ந்த வீடியோ

சில நாட்கள் முன் முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாஹன் ஒரு குட்டிப் பையன் பேட்டிங் செய்யும் வீடியோவை வெளியிட்டு தன் வியப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

டயாப்பர் சிறுவன்

டயாப்பர் சிறுவன்

அந்த வீடியோவில் 2 அல்லது 3 வயது இருக்கும் சிறுவன் ஒருவன் டயாப்பர் மாட்டிக் கொண்டு பேட்டிங் செய்கிறான். உண்மையான கிரிக்கெட் வீரர்கள் போல கையில் கிளவுஸ் வேறு அணிந்து இருந்தான்.

பந்தை வீசுங்கள்

பந்தை வீசுங்கள்

அந்த சிறுவனின் முகபாவனைகள் எல்லாம் வேற லெவலில் இருந்தது. பேட்டிங் செய்ய தயாரான பின் பந்தை வீசுங்கள் என்கிறான். கேமராவின் பின் புறம் இருந்து ஒருவர் பந்தை வீசுகிறார்.

நேர்த்தியான ஷாட்கள்

நேர்த்தியான ஷாட்கள்

ஒவ்வொரு பந்தையும் சரியாக டைமிங் செய்து அடிக்கிறான் அந்த குட்டிப் பையன். அடிப்பது என்றால் ஏனோ, தானோ அடி இல்லை. ஒவ்வொன்றும் நேர்த்தியான கிரிக்கெட் ஷாட்கள்.

மிரள வைத்த சிறுவன்

மிரள வைத்த சிறுவன்

அந்த பையன் பேட்டை பிடித்திருப்பது கூட நேர்த்தியாக இருந்தது. ஸ்ட்ரைட் டிரைவ், கவர் டிரைவ், லாப்ட் ஷாட் என மிரள வைத்தான் அந்த சிறுவன். அந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவியது.

கெவின் பீட்டர்சன் வியப்பு

கெவின் பீட்டர்சன் வியப்பு

அதே வீடியோவை முன்னாள் இங்கிலாந்து வீரர் கெவின் பீட்டர்சன் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார். அந்த வீடியோவின் கீழ், நம்ப முடியாத பேட்டிங்கை பற்றி குறிப்பிட்ட பீட்டர்சன், இந்திய அணி கேப்டன் விராட் கோலி தன் அணியில் அந்த பையனை சேர்த்துக் கொள்ள முடியுமா? என கேட்டு இருந்தார்.

கோலி பதில்

கோலி பதில்

பீட்டர்சன் பகிர்ந்த அந்த வீடியோவை கண்ட கேப்டன் கோலி, தன் வியப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். அந்த சிறுவன் எங்கே இருக்கிறன்? என கேட்டு இருக்கும் அவர், நம்ப முடியாத ஆளாக இருக்கிறான் என கூறி இருக்கிறார்.

ஒருநாள் தொடர்

ஒருநாள் தொடர்

கேப்டன் விராட் கோலி தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு தயாராகி வருகிறார். தவான், புவனேஸ்வர் குமார் காயத்தால் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

முதல் ஒருநாள் போட்டி

முதல் ஒருநாள் போட்டி

அவர்களுக்கு மாற்றாக மயங்க் அகர்வால், ஷர்துல் தாக்குர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் முதல் ஒருநாள் போட்டி டிசம்பர் 15 அன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது.

Story first published: Saturday, December 14, 2019, 15:43 [IST]
Other articles published on Dec 14, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+