Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

விஜய், அஜித்தை சந்திப்பாரா விராட் கோலி.. லண்டனில் உச்சக்கட்ட எதிர்பார்ப்பு

லண்டன்: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேனான விராட் கோலி, சமீபத்தில் லண்டனில் சிவ சேனாவின் யுவ சேனா பொதுச் செயலாளர் ராகுல் என். கானலைச் சந்தித்துள்ளார். இநத சூழலில் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் மற்றும் கார் பந்தயத்தில் பங்கேற்றுள்ள நடிகத் அஜித் ஆகியோரையும் கோலி சந்திப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து நட்சத்திர ஆட்டக்காரர் கோலி எடுத்துக்கொண்ட பிரேக்கின் போது இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது. கடந்த ஜூலை மாதம் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்குப் பிறகு கோலி களத்தில் காணப்பட்டார். இந்த ஓய்வு நாட்களின் போது லண்டனில் சிவசேனா தலைவர் ராகுல் கானலைச் சந்தித்து அவர் உரையாடினார்.

Vijay Virat Kohli

இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் விராட் கோலி 5 ரன்களில் ஆட்டமிழந்தார். எனினும், அடுத்த போட்டிகளில் முறையே 65 மற்றும் 74 ரன்கள் எடுத்து அரைசதம் விளாசி அவர் மீண்டும் தனது ஃபார்முக்கு திரும்பினார். இந்தத் தொடரின் முதல் போட்டியில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற போதிலும், அடுத்த இரண்டு போட்டிகளில் இங்கிலாந்து அணி தொடர்ந்து வெற்றி பெற்று 2-1 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது.

IND vs AFG: இசான் கிஷனுக்கு காயம்.. பேட்டிங் பயிற்சியில் பந்து தாக்கியது.. முதல் டி20-யில் சந்தேகம்

IND vs AFG: இசான் கிஷனுக்கு காயம்.. பேட்டிங் பயிற்சியில் பந்து தாக்கியது.. முதல் டி20-யில் சந்தேகம்

இந்திய அணியின் அடுத்த ஒருநாள் கிரிக்கெட் தொடர், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக உள்நாட்டில் நடைபெற உள்ளது. இத்தொடரின் முதல் போட்டி செப்டம்பர் 27 அன்று திருவனந்தபுரத்தில் உள்ள கிரீன்ஃபீல்ட் சர்வதேச மைதானத்தில் தொடங்குகிறது. இரண்டாவது மற்றும் மூன்றாவது ஒருநாள் போட்டிகள் முறையே செப்டம்பர் 30 அன்று குவஹாத்தியில் உள்ள பர்சபரா கிரிக்கெட் மைதானத்திலும், அக்டோபர் 3 அன்று முல்லான்பூரில் உள்ள மகாராஜா யாதவிந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்திலும் நடைபெற உள்ளன.

லண்டன் பயணத்தின் போது மகாராஷ்டிர மாநில துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவும் விராட் கோலியைச் சந்தித்தார். அப்போது, இந்திய அணியின் முன்னாள் கேப்டனான விராட் கோலிக்கு ஷால் அணிவித்தும், பூங்கொத்து கொடுத்தும் ஷிண்டே வாழ்த்து தெரிவித்தார்.

IND vs NZ: இந்த 2 இந்திய வீரர்கள் தான் நியூசிலாந்து டெஸ்டில் கவனிக்க வேண்டியவர்கள்.. போல்ட் கருத்து

Also Read

IND vs NZ: இந்த 2 இந்திய வீரர்கள் தான் நியூசிலாந்து டெஸ்டில் கவனிக்க வேண்டியவர்கள்.. போல்ட் கருத்து

இந்த சூழலில் தான் முதலீட்டாளர்களை ஈர்க்கவும், கார் பந்தயங்களில் பங்கேற்றுள்ள சக நடிகரும், நண்பருமான அஜித்தை சந்திக்க விஜய் சென்றுள்ளார். இதனால், விராட் கோலி இந்த இரண்டு பிரபலங்களையும் சந்திப்பாரா மற்றும் அஜித் பங்கேற்கும் பந்தயத்தை காண விராட் கோலி நேரில் வருவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஒரு வேலை இந்த 3 பிரபலங்களும் சந்தித்து புகைப்படம் எடுத்து கொண்டால், ஒட்டுமொத்த ரசிகர்களும் உற்சாகத்தில் மிதப்பார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.

Story first published: Saturday, September 12, 2026, 17:43 [IST]
Other articles published on Sep 12, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+