Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

விராட் கோலிக்கு காயம்.. கையை பதம் பார்த்த பந்து.. ஐபிஎல் தொடருக்கு ஆபத்து இல்லையே?

இந்தூர் : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வி அடையும் தருவாயில் உள்ளது.டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 109 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது.

இதனை எடுத்து ஆஸ்திரேலிய அணி தங்களது முதலில் விளையாடியது. இதில் ஆஸ்திரேலிய அணி 197 ரன்கள் எடுத்தது. 88 ரன்கள் பின் தங்கிய இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங் செய்தது.

இதிலும் பெரிய ஸ்கோர் அடிக்க இந்திய வீரர்கள் தடுமாறினர். இதனால் இந்திய அணி 163 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனையடுத்து கடைசி இன்னிங்சில் 76 ரன்கள் பெற்றால் வெற்றி என்ற இலக்கு ஆஸ்திரேலியாவுக்கு உள்ளது.

கோலி 13 ரன்கள்

கோலி 13 ரன்கள்

இதனால் இந்திய அணி இந்த டெஸ்ட் போட்டியில் தோல்வி அடைவது கிட்டத்தட்ட உறுதியாக விட்டது. இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங் செய்யும்போது விராட் கோலி பெரிய ஸ்கோர் அடிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். 26 பந்துகளை எதிர்கொண்ட விராட் கோலி 13 ரன்கள் எடுத்தார்.

காயம்

காயம்

இதில் இரண்டு பவுண்டரிகளும் அடங்கும். விராட் கோலி பேட்டிங் செய்திருக்கும்போது ஆடுகளத்தில் பந்து ஒன்று எதிர்பாராத வகையில் பவுன்ஸ் ஆகி விராட் கோலியின் கைவிரலை பதம் பார்த்தது. இதனை அடுத்து வலியால் அவதிப்பட்ட விராட் கோலிக்கு மருத்துவ முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன்பிறகு விராட் கோலி தனது இன்னிங்ஸை தொடங்கினார். அந்த ஓவர்லே அவர் பவுண்டரி அடித்து பதிலடி கொடுத்தார்.

 தப்பித்த கோலி

தப்பித்த கோலி

விராட் கோலிக்கு ஏற்பட்ட காயம் குறித்து பேசிய தினேஷ் கார்த்திக், சுழற் பந்துவீச்சாளர் என்பதால் விராட் கோலி பெரிய காயம் இன்றி தப்பித்துள்ளதாகவும், இதுவே வேகப்பந்து வீச்சாளர் பந்தை எதிர்கொண்டு விராட் கோலி கையில் பந்து தாக்கி இருந்தால், அது விரல் முறிவையே ஏற்பட்டிருக்கும் என்றும் கூறியுள்ளார்.

பயமில்லை

பயமில்லை

இப்படி நடந்திருந்தால் விராட் கோலி ஐபிஎல் தொடரில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கும். தற்போது காயம் குறித்து இதுவரை பிசிசிஐ எந்த அறிவிப்பையும் வெளியிடப்படவில்லை. காயத்திற்கு பிறகு விராட் கோலி சிகிச்சை எடுத்துக் கொண்டு விளையாடியதால் அச்சப்படும் வகையில் ஏதும் இருக்காது என கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவித்து உள்ளனர்.

Story first published: Thursday, March 2, 2023, 18:20 [IST]
Other articles published on Mar 2, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+