Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பாபர் அசாமிற்கு டி20 ஆட்டம் கைகூடவில்லை.. விராட் கோலி எட்டியதை பாதி கூட எட்டவில்லை.. ஹர்பஜன் சிங்!

மும்பை: இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் விராட் கோலியின் இடத்தை பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் பிடித்துவிட்டதாக பேசி வரும் பாகிஸ்தான் முன்னாள் வீரர்களுக்கு ஹர்பஜன் சிங் பதிலடி கொடுத்துள்ளார்.

இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்திற்கு எப்போதும் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு இருக்கும். பாகிஸ்தான் அணியின் வேகப்பந்துவீச்சாளர்களை இந்திய அணி பேட்ஸ்மேன்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதே ஆட்டத்தை நிர்ணயிக்கும். ஆனால் பாகிஸ்தான் அணி தரப்பிலும் எப்போதும் சிறந்த பேட்ஸ்மேன்கள் இருந்திருக்கிறார்கள். அண்மை காலமாக பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாமை, அந்நாட்டு கிரிக்கெட் ஜாம்பவான்கள் விராட் கோலியுடன் ஒப்பிட்டு வருகிறார்கள்.

Virat Kohli is a 3 Format player; But T20 cricket doesnt suit for Babar Azam says Harbhajan Singh

அதற்கேற்ப அவரும் ஒருநாள், டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகள் ரன்களை குவித்து வருகிறார். அனைத்து நாடுகளிலும் சிறப்பாக பேட்டிங் செய்து வரும் பாபர் அசாம், ஐசிசி தரவரிசை பட்டியலிலும் முன்னிலையில் உள்ளார். இதனால் பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள், பந்துவீச்சாளர்களுக்கு ஈடாக பேட்ஸ்மேன்களை உருவாக்கியுள்ளோம் என்று விராட் கோலியுடன் ஒப்பிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகிறார்கள். இந்த விவகாரம் குறித்து பாகிஸ்தான் ஜாம்பவான் அக்தருடன் இந்திய முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் நடத்திய உரையாடலின் போது கருத்து தெரிவித்துள்ளார்.

அதில் ஹர்பஜன் சிங் பேசுகையில், சர்வதேச கிரிக்கெட்டில் விராட் கோலி தன்னை மாவீரராக அனைவருக்கும் நிரூபித்து காட்டிவிட்டார். ஆனால் பாபர் அசாம் அப்படியல்ல. நிச்சயம் ஒருநாள் விராட் கோலியின் இடத்தை பாபர் அசாம் பிடிக்கலாம். ஏனென்றால் பாபர் சிறந்த கிரிக்கெட்டை விளையாடி வருகிறார். டெஸ்ட் கிரிக்கெட்டை சிறப்பாக ஆடினாலும், டி20 கிரிக்கெட் அவருக்கு இன்னும் கைகூடவில்லை.

விராட் கோலியை பொறுத்தவரை, தான் ஒரு சிறந்த பேட்ஸ்மேன் என்ற இடத்தை அடைந்துவிட்டார். ஆனால் பாபர் அசாமிற்கு அப்படியல்ல. விராட் கோலி சென்ற பாதையில் பாபர் அசாம் இன்னும் பாதி தூரம் கூட பயணிக்கவில்லை. டி20 கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட முயற்சித்து வருகிறார். அதேபோல் பாபர் அசாமிற்கு மக்கள் கண்களை மூடிக்கொண்டு ஆதரவளித்து வருகிறார்கள் என்று தெரிவித்துள்ளார். 2015ஆம் ஆண்டு முதல் சர்வதேச கிரிக்கெட்டை ஆடிவரும் பாபர் அசாம், 3 வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் சேர்த்து 30 சதங்களை விளாசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Story first published: Friday, June 30, 2023, 8:30 [IST]
Other articles published on Jun 30, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+