Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சர்வதேச கிரிக்கெட்டுல அவர் தான் பெஸ்ட்... மார்க் டெய்லரே சொல்லிட்டாரே!

சிட்னி : சர்வதேச கிரிக்கெட்டில் மிகவும் வலிமையான வீரர் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தான் என்று முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் மார்க் டெய்லர் கூறியுள்ளார்.

தனக்கு கொடுக்கப்பட்டுள்ள பொறுப்புகளை மிகவும் மரியாதையுடன் அவர் செய்து வருவதாகவும் மார்க் டெய்லர் குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல, டெஸ்ட் கிரிக்கெட்டை விரும்பும் ஒரு கேப்டன் கிடைத்திருப்பது இந்திய அணிக்கு மிகவும் சிறப்பானது என்று முன்னாள் இந்திய கோச் கிரெக் சாப்பல் தெரிவித்துள்ளார்.

மிகவும் வலிமையான வீரர்

மிகவும் வலிமையான வீரர்

சர்வதேச கிரிக்கெட்டில் மிகவும் வலிமையான வீரர் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி என்று முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் மார்க் டெய்லர் தெரிவித்துள்ளார். தன்னுடைய கிரிக்கெட் பயணத்தை ஆரம்பம் முதலே ஆக்கிரமித்து சிறப்பாக அதில் நடைபோட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

செல்வாக்கு மிக்க வீரர் விராட்

செல்வாக்கு மிக்க வீரர் விராட்

சிட்னி மார்னிங் ஹெரால்ட்டில் பேசிய மார்க் டெய்லர், விளையாட்டிற்கும் விளையாடுபவர்களுக்கும் விராட் கோலி மிகுந்த மரியாதை அளிப்பார் என்று கூறியுள்ளார். இதனிடையே உலக அளவில் மிகவும் செல்வாக்கு மிக்க வீரர் விராட் கோலி என்று முன்னாள் இந்திய பயிற்சியாளர் கிரெக் சாப்பல் தெரிவித்துள்ளார்.

வலிமையான கருத்துக்களை கொண்டவர்

வலிமையான கருத்துக்களை கொண்டவர்

மேலும் தன்னுடைய கருத்துக்களை தைரியமாக வெளியில் சொல்லவும் விராட் கோலி தயங்க மாட்டார் என்றும் அவர் பாராட்டு தெரிவித்துள்ளார். வலிமையான கருத்துக்களை கொண்டவர் விராட் கோலி என்று கூறியுள்ள சாப்பல், அதை மகிழ்ச்சியுடன் வெளிப்படுத்துவதில் தயக்கம் இன்றி செயல்படுவதுடன் அந்த கருத்துக்களில் இருந்து பின்வாங்காமல் செயல்படுபவர் என்றும் கூறியுள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு மரியாதை

டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு மரியாதை

மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டை விராட் கோலி அதிகமாக விரும்புவதாகவும் அதற்கு மரியாதை அளிப்பதாகவும் சாப்பல் சுட்டிக் காட்டியுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டை விரும்பாத கேப்டன் இநதியாவிற்கு கிடைத்திருந்தால் அது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் உள்ளிட்டவற்றிற்கு பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும் என்றும் சாப்பல் கூறியுள்ளார்.

Story first published: Monday, November 16, 2020, 12:22 [IST]
Other articles published on Nov 16, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+