மெஸ்ஸி, ஜோகோவிக்கை விட ஒஸ்தி "சரக்கு" எது தெரியுமா.. கோஹ்லிதான்!
டெல்லி: உலகின் அதிக சந்தை மதிப்புடைய விளையாட்டு வீரர்கள் வரிசையில் 3வது இடத்தைப் பிடித்துள்ளார் விராத் கோஹ்லி. லியோனல் மெஸ்ஸி, ஜோகோவிக் போன்றோர் எல்லாம் கோஹ்லிக்கு பின்னால்தான் வருகின்றனர்.
ஸ்போர்ட்ஸ்புரோ இதழ் உலகின் சந்தை மதிப்பு அதிகம் உள்ள வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில்தான் கோஹ்லிக்கு 3வது இடம் கிடைத்துள்ளது.
முதல் இடத்தில் அமெரி்க்காவைச் சேர்ந்த கூடைப்பந்தாட்ட வீரர் ஸ்டீபன் கர்ரி உள்ளார். 2வது இடத்தில் பிரான்ஸைச் சேர்ந்த கால்பந்தாட்ட வீரர் பால் போக்போ உள்ளார்.

பெருசுகளைத் தாண்டி
விளையாட்டு உலகில் மிக முக்கியமானவர்களாக வலம் வரும் கோல்ப் வீரர் ஜோர்டன் ஸ்பீத், டென்னிஸ் வீரர் ஜோகோவிக், கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி, தடகள வீரர் உசேன் போல்ட் ஆகியோர் எல்லாம் கோஹ்லிக்குப் பின்னால்தான் வருகின்றனர்.

4வது இடத்தில் ஜோர்டன் ஸ்பீத்
ஜோர்டன் ஸ்பீத் 4வது இடத்தில் இருக்கிறார். ஜோக்கோவில் 23வது இடத்தில் உள்ளார். மெஸ்ஸிக்கு 27வது இடமே கிடைத்துள்ளது. போல்ட் 31வது இடத்தில் இருக்கிறார்.

பணம் - வயது - மதிப்பு
வீரர்கள் சம்பாதிக்கும் வருமானம், வயது, அவர்களது சந்தை மதிப்பு, கவர்ச்சி உள்ளிட்டவற்றை இந்தப் பட்டியலைத் தயாரித்துள்ளது ஸ்போர்ட்ஸ்புரோ.

நெய்மாருக்கு 8வது இடம்
கடந்த 2012, 2013 ஆகிய ஆண்டுகளில் முதலிடத்தைப் பிடித்திருந்தவரான பிரேசில் கால்பந்து வீரர் நெய்மார் இந்த முறை 8வது இடத்தைப் பிடித்துள்ளார். போல்ட் 2011ல் முதலிடத்தில் இருந்தார் என்பது நினைவிருக்கலாம்.

சானியா மிர்ஸா
2010ம் ஆண்டு முதல் இந்தப் பட்டியலை ஸ்போர்ட்ஸ்புரோ வெளியிட்டு வருகிறது. இப்பட்டியலில் டாப் 50 இடங்களுக்குள் இந்தியாவின் சானியா மிர்ஸாவும் இருக்கிறார்.


Click it and Unblock the Notifications