Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

புதிய சாதனையை எதிர்நோக்கி விராட் கோலி..!! 4 பேருக்கு மட்டுமே கிடைத்த வாய்ப்பு..

அகமதாபாத்: இந்தியா, மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் முன்னாள் கேப்டன் விராட் கோலி புதிய சாதனையை படைக்க உள்ளார்.

விராட் கோலி சாதனை பட்டியல் என்று ஒரு புத்தகம் எழுதும் அளவுக்கு , அவரது சாதனை பட்டியல் இருக்கும்.

இந்த நிலையில், விராட் கோலி கடந்த 2 ஆண்டுகளாகவே அவரை போலவே விளையாடவில்லை. கோலி என்றால் ரன் மிஷின் என்று அர்த்தம்.

2 ஆண்டுகள்

2 ஆண்டுகள்

ஆனால் அந்த ரன் மிஷினுக்கு என்ன ஆனது என்று தெரியவில்லை. சர்வதேச கிரிக்கெட்டில் சதம் விளாசி 2 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. அவருடைய 71வது சதம் இன்று வரும், நாளை வந்துவிடும் என காத்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இதற்கு காரணம், கோலியின் பலமே ஒருநாள் போட்டி தான். அதில் கடந்த 2 ஆண்டுகளாக இந்தியா போதிய ஆட்டங்களில் விளையாடவில்லை.

புதிய மைல்கல்

புதிய மைல்கல்

விராட் கோலி தொடர்ந்து ஒரு 10 ஒருநாள் போட்டியில் விளையாடினால், அவர் தனது பழைய ஃபார்மை மீட்டு எடுப்பார். இந்த நிலையில், விராட் கோலி ஒரு புதிய சாதனை மைல்கல்லை எட்ட போகிறார். ஆம், இந்தியாவில் நாளை தனது 100வது ஒருநாள் போட்டியில் விளையாட உள்ளார் விராட் கோலி.

5வது இந்திய வீரர்

5வது இந்திய வீரர்

இதற்கு முன் சச்சின் டெண்டுல்கர் 164 போட்டிகள், தோனி 127 போட்டிகள், அசாரூதீன் 113 போட்டிகள், யுவராஜ் சிங் 108 போட்டிகளில் விளையாடி உள்ளனர். இந்த மைல்கல்லை எட்டும் 5வது இந்திய வீரர் என்ற பெருமையை விராட் கோலி எட்ட உள்ளார். இதனால் இந்த விசேஷ நாளில் தனது 71வது சதத்தை பூர்த்தி செய்வார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

Recommended Video

Virat Kohli நிதானம் இல்லாமல் விளையாடுகிறார்.. Sunil Gavaskar எச்சரிக்கை
புள்ளி விவரம்

புள்ளி விவரம்

இந்தியாவில் 99 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள கோலி இதுவரை 5002 ரன்கள் அடித்துள்ளார். இதில் 19 சதம், 25 அரைசதம் அடங்கும். கோலி மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக 40 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 2243 ரன்கள் அடித்துள்ளார். இதில் 9 சதங்கள் அடங்கும். மேற்கிந்திய திவுகளை எப்போதும் சுலபமாக டீல் செய்யும் கோலி நாளைக்கு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி தருவார் என எதிர்பார்க்கலாம்.

Story first published: Tuesday, February 8, 2022, 23:53 [IST]
Other articles published on Feb 8, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+