விராட் கோலியின் 10 அவதாரங்கள்..!! ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்திய புகைப்படம்
மும்பை: இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம், ரசிகர்களிடையே குழப்பத்தையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ந்து பயோ பபுளில் இருப்பதால் மனதில் தொய்வு ஏற்படும் என்று கூறி, விராட் கோலிக்கு பிசிசிஐ ஓய்வு வழங்கியது.
இதனால் விராட் கோலி தனது குடும்பத்தினருடன் வெளிநாட்டுக்கு சென்று விடுமுறையை கழிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

பணக்கார வீரர்
ஆனால் விராட் கோலிக்கு அதைவிட முக்கியமான வேலை இருந்தது தெரியவந்தது. இந்தியாவின் நம்பர் 1 பணக்கார விளையாட்டு வீரர் என்ற பெருமையை பெற்றுள்ள விராட் கோலி, பெருமளவு வருமானத்தை விளம்பரங்களில் நடிப்பது மூலமே பெற்று வருகிறார்.

விளம்பரம்
இந்த நிலையில், தொடர்ந்து 2 மாதங்களில் கிரிக்கெட் விளையாடியதால், விளம்பரங்களில் நடிக்க விராட் கோலிக்கு போதிய நேரம் கிடைப்பதில்லை. இதனால் தற்போது கிடைத்துள்ள ஓய்வில், தொடர்ந்து விளம்பரங்களில் நடிக்க விராட் கோலி முடிவு எடுத்துள்ளார். இதற்காக பல கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளது.

ஒரே மாதிரி..
இந்த நிலையில், விராட் கோலி இன்று ஒரு விளம்பரத்தில் நடித்து உள்ளார். அதில் விராட் கோலியை போலவே தோற்றம் உள்ள 9 பேர், அந்த விளம்பரத்தில் இடம்பெற்றுள்ளனர். ஒரே ஹேர் ஸ்டைல், ஒரே ஆடை என அச்சு அசலாக விராட் கோலி போல் 9 பேரும் இருக்கும் புகைப்படத்தை தற்போது அவர் வெளியிட்டுள்ளார்.

கோலி கேள்வி
அதில், இதில் வித்தியாசமாக இருக்கும் நபரை கண்டுபிடிங்க என்று விராட் கோலி பதிவிட, ரசிகர்கள் பலரும் ஓரிஜனல் விராட் கோலியை கண்டுபிடித்து பதிவிட்டு வருகின்றனர். டி20 தொடரில் தற்போது விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ள நிலையில், டெஸ்ட் தொடரில் விராட் கோலி விளையாட உள்ளார். மார்ச் 4ஆம் தேதி முதல் டெஸ்ட் போட்டி நடைபெற உள்ளது.


Click it and Unblock the Notifications