Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

500வது போட்டியில் களமிறங்கும் விராட் கோலி.. சதம் அடித்து சாதிப்பாரா? கோலியால் பிறருக்கு ஏற்பட்ட லக்

மும்பை : மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி வரும் வியாழன் கிழமை 20 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த போட்டி சர்வதேச கிரிக்கெட்டில் விராட் கோலி களமிறங்க போகும் 500-வது ஆட்டமாகும்.

விராட் கோலி எப்போதெல்லாம் ஒரு பெரிய மையில்கல்லை தொட இருக்கிறாரோ, அப்போதெல்லாம் அவரை விட மற்றவர்களுக்கு தான் மிகப்பெரிய லக் வந்து சேர்ந்திருக்கிறது.

Virat kohli is going to play his 500th international matches vs wi 2nd test

விராட் கோலி தனது 100வது சர்வதேச போட்டியில் விளையாடும் போது வங்கதேசத்துக்கு எதிராக அவர் 66 ரன்கள் சேர்த்தார். ஆனால் அதே போட்டியில் சச்சின் டெண்டுல்கர் தனது 100வது சதத்தை பூர்த்தி செய்து உலக சாதனை படைத்தார். விராட் கோலி தனது 200வது கிரிக்கெட் போட்டியில் விளையாடும் போது இலங்கைக்கு எதிராக 49 ரன்கள் சேர்த்தார். ஆனால் அதே ஆட்டத்தில் ராயுடு தனது முதல் சதத்தை பூர்த்தி செய்தார்.

அதேபோன்று விராட் கோலி தனது 300வது கிரிக்கெட் போட்டியில் வெறும் 4 ரன்களை தான் இலங்கைக்கு எதிராக அடித்தார். ஆனால் அந்த ஆட்டத்தில் தோனியும் புவனேஸ்வர் குமாரும் எட்டாவது விக்கெட்டுக்கு இணைந்து நூறு ரன்கள் சேர்த்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.

இதே போன்று விராட் கோலி தனது 400 வது சர்வதேச கிரிக்கெட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் எதிராக டக் அவுட் ஆனார். அதே ஆட்டத்தில் குல்தீப் யாதவ் ஹாட்ரிக் சாதனையை நிகழ்த்தினார். மேலும் ரோகித் சர்மா அந்த ஆட்டத்தில் எட்டாவது முறையாக 150 ரன்கள் மேல் ஒரு நாள் கிரிக்கெட்டில் அடித்தார். இதனால் விராட் கோலி எப்போதெல்லாம் மைல்கல்லை எட்டுகிறாரோ அது அவரை விட மற்றவர்கள் தான் சாதகமாக இருக்கிறது.

இந்த நிலையில் 500-வது சர்வதேச கிரிக்கெட் போட்டியில் விளையாடப் போகும் விராட் கோலி ஏதேனும் சாதனை படைப்பாரா? இல்லை வழக்கம்போல் மற்ற வீரர்கள் ஏதேனும் சாதனை படைப்பார்களா என ரசிகர்கள் யோசித்து வருகிறார்கள். விராட் கோலி 499 போட்டிகளில் விளையாடி 25,461 ரன்கள் அடித்திருக்கிறார்.இதில் அதிகபட்சமாக 254 ரன்கள் சேரும். சராசரியாக 53 ரன்கள் அடித்திருக்கும் விராட் கோலி 75 சதங்களையும் 131 அரைச்சதங்களையும் அடித்திருக்கிறார்.

Story first published: Sunday, July 16, 2023, 20:30 [IST]
Other articles published on Jul 16, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+