கோலி -ஸ்மித் ரெண்டு பேருக்குமே போராட்ட குணம் இருக்கு... ஒருத்தருக்கு ஒருத்தர் சளைச்சவங்க இல்ல!
டெல்லி : விராட் கோலி மற்றும் ஸ்டீவ் ஸ்மித் இருவருக்கும் போராட்ட குணங்கள் அதிகமாக இருப்பதாக முன்னாள் ஜிம்பாப்வே கேப்டன் ஆண்டி ப்ளவர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இருவருக்குமே தலைமை பண்புகள் சிறப்பாக உள்ளதாகவும் அனைவருக்கும் ரோல் மாடலாக இருப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
இருவரும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் இல்லை என்றும் இருவரில் சிறப்பானவரை பிரிக்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.

சர்வதேச முன்னணி வீரர்கள்
இந்திய கேப்டன் விராட் கோலி மற்றும் ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் இருவரும் தங்களது அணிக்கு கடந்த பல வருடங்களாக சிறப்பு சேர்த்து வருபவர்கள். இவர்கள் இருவருக்கும் சர்வதேச அளவில் அதிகமான ரசிகர்கள் காணப்படுகின்றனர். சர்வதேச டெஸ்ட் தரவரிசையில் இரண்டாவது மற்றும் 3வது இடங்களில் இவர்கள் உள்ளனர்.

ஆண்டி ப்ளவர் பாராட்டு
இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் அதிகமான போராட்ட குணங்கள் காணப்படுவதாக ஜிம்பாப்வே அணயின் முன்னாள் கேப்டன் ஆண்டி ப்ளவர் பாராட்டு தெரிவித்துள்ளார். இருவரும் பலருக்கு ரோல் மாடலாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இருவரில் சிறப்பானவரை பிரிக்க முடியாது என்றும் அவர் பாராட்டு தெரிவித்துள்ளார்

ஸ்மித்தின் சிறப்பான குணம்
இதேபோல இருவருக்குள்ளும் தலைமை பண்புகள் சிறப்பாக உள்ளதாகவும் ஸ்மித் டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாடுவதாகவும் ப்ளவர் தெரிவித்துள்ளார். ஆனால் கிரிக்கெட்டின் மற்ற வடிவங்களுக்கு தக்க தன்னை மாற்றிக் கொள்ளும் ஸ்மித்தின் பண்பு மிகவும் சிறப்பானது என்றும் அவர் கூறியுள்ளார்.

விராட் குறித்து பாராட்டு
இதேபோல, நம்ப முடியாத திறமை கொண்டவர் விராட் கோலி என்றும் ப்ளவர் தெரிவித்துள்ளார். ரன்களை குவிப்பதில் அதிக விருப்பம் உள்ளவர் என்றும் போராட்ட குணம் கொண்டவர் என்றும் அந்த குணமே தன்னை மிகவும் கவர்ந்துள்ளதாகவும் ஆண்டி ப்ளவர் கூறினார்.


Click it and Unblock the Notifications