Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

விராட் கோலி ஒரு புலி! அவரை பற்றி தப்பாக பேசினால், அது குப்பைக்கு சமம்.. ஆஸ்திரேலிய ஜாம்பவான் கருத்து

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி தற்போது 38 வயது நெருங்குகிறார். அடுத்த உலக கோப்பையில் விளையாடும் போது அவருக்கு 39 வயதாக இருக்கும். இந்த சூழலில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மாவை அணியை விட்டு நீக்க பல்வேறு முயற்சிகள் நடைபெற்ற வருவதாக ரசிகர்கள் குற்றம் சாட்டினர்.

எனினும் இருவரும் நல்ல உடல் தகுதியுடன் இருக்கும் வரை கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்பார்கள் என்று பிசிசிஐ அறிவித்திருந்தது. விராட் கோலி நல்ல பார்மில் உள்ள நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான முதல் போட்டியில் ஐந்து ரன்களில் ஆட்டம் இழந்தார். அப்போது அவர் மீது விமர்சனம் எழுந்த நிலையில் அடுத்த இரண்டு டி20 போட்டிகளிலும் 65 மற்றும் 74 ரன்கள் எடுத்து அசத்தினார்.

Virat Kohli

இந்த நிலையில் தனது கிரிக்கெட் வாழ்க்கையின் கடைசி கட்டத்தில் விராட் கோலி போன்ற வீரருக்கு பந்து வீசிய அனுபவம் குறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் பிரெட்லி தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார். அப்போது அவர் விராட் கோலிக்கு ஆதரவாக பல்வேறு கருத்துக்களை கூறியுள்ளார்.

IND vs SL: சாய் சுதர்சன் விலகல்.. 2 சிஎஸ்கே வீரர்கள் உள்பட 3 வீரர்கள் இடையே கடும் போட்டி

IND vs SL: சாய் சுதர்சன் விலகல்.. 2 சிஎஸ்கே வீரர்கள் உள்பட 3 வீரர்கள் இடையே கடும் போட்டி

"அவருடைய கண்களைப் பார்க்கும்போது, அவர் உங்களை நேராகப் பார்ப்பார். அது 'ஆட்டம் ஆரம்பம், என்னை உன்னால் அவுட் செய்ய முடியாது' என்று சவால் விடுவது போல் இருக்கும்.அவருக்கு எதிராக விளையாடிய போது நான் அதை நேரில் கண்டுள்ளேன். அவர் இப்போதும் அதே போன்ற ஒரு புலி தான். தான் சாதித்ததை நினைத்து அவர் நிச்சயம் பெருமைப்படுவார். மக்கள் என்ன வேண்டுமானாலும் நினைத்துக் கொள்ளட்டும்."

சச்சின், விராட் கோலி இல்ல.. இந்த கேகேஆர் வீரர் தான் ஆல் டைம் சிறந்த வீரர்.. பிரெட் லீ பாராட்டு

Also Read

சச்சின், விராட் கோலி இல்ல.. இந்த கேகேஆர் வீரர் தான் ஆல் டைம் சிறந்த வீரர்.. பிரெட் லீ பாராட்டு

"ஒரு போட்டியில் அவர் ரன் அடிக்கவில்லை என்றால், அவரது ஆட்டம் முடிந்துவிட்டது என்று சொல்வதெல்லாம் வெறும் குப்பை. அவரது சாதனைகளைப் பாருங்கள். அவரது சாதனை மிகவும் அபாரமானது" என்று பாராட்டினார். விராட் கோலியை இதுவரை பீரெட் லீ, ஒரு முறை கூட அவுட்டாக்கியது இல்லை என்ற புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. விராட் கோலி, சிர்வதேச கிரிக்கெட்டில் விளையாடிய காலத்தில், பீரெட் தனது கடைசி அத்தியாயத்தில் இருந்ததால், இருவரும் வெறும் சொற்ப அளவிலே இணைந்து விளையாடியுள்ளனர்.

Story first published: Sunday, August 9, 2026, 9:33 [IST]
Other articles published on Aug 9, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+