Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

'ஆவேச ஆட்ட' கோஹ்லிக்கு விவிலியன் ரிச்சர்ட்ஸ் புகழாரம்!

மெல்போர்ன்: இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக ஜொலிக்கும் கோஹ்லிக்கு மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் அதிரடி வீரர் விவியன் ரிச்சர்ட்ஸ் புகழாரம் சூட்டியுள்ளார்.

ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்தில் கோஹ்லியின் பேட்டிங் மிகவும் சிறப்பாக இருந்து வருகிறது. 3 டெஸ்ட் போட்டிகளில் 6 இன்னிங்சில் விளையாடி 499 ரன்கள் குவித்தார் கோஹ்லி. இதில் 3 சதமும், ஒரு அரை சதமும் அடங்கும்.

மெல்போர்ன் டெஸ்டில் 169 ரன்களை கோஹ்லி குவித்தது அதிகபட்ச ஸ்கோராகும். அடிலெய்டு டெஸ்டில் கேப்டன் பொறுப்பில் 2 இன்னிங்சிலும் சதம் அடித்து அவர் அபாரத்தை வெளிப்படுத்தினார்.

Virat Kohli is a 'little bull terrier', says Vivian Richards

டோணியின் திடீர் ஓய்வால் சிட்னியில் நடைபெறும் கடைசி டெஸ்ட்டில் கேப்டனாக கோஹ்லி நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய அணியின் டெஸ்ட் கேப்டனான கோஹ்லி சிட்னியிலும் ஆதிக்கம் செலுத்துவார் என்று எதிர்பர்க்கப்படுகிறது.

இந் நிலையில் கோஹ்லியின் ஆட்டத்துக்கு மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் அதிரடி வீரர் விவியன் ரிச்சர்ட்ஸ் ஆதரவு தெரிவித்து உள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:

கோஹ்லியின் ஆட்டத்தை நான் மிகவும் நேசிக்கிறேன். நவீன யுக வீரரான அவரது பேட்டிங் ஆவேசம் தொடர வேண்டும்.

ரசிகர்களுக்கு சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி மகிழ்விக்கிறார். அவரது ஆட்ட முறையை ரசிகர்கள் புரிந்து நன்றாகவே புரிந்து கொள்கின்றனர்.

மைதானத்தில் அவரை வெறுப்பேற்றுவது சிறந்த ஆட்டத்துக்கு உதவுகிறது. அவரது இந்த மோதல் போக்கும் நீடிக்க வேண்டும். அவர் நடந்து கொள்ளும் விதத்தில் எந்த தவறும் இல்லை.

இவ்வாறு விவியன் ரிச்சர்ட்ஸ் கூறியுள்ளார்.

Story first published: Monday, January 5, 2015, 9:23 [IST]
Other articles published on Jan 5, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+