இப்போ ரொம்ப "மெச்சூர்ட்" ஆயிட்டாரு.. கோஹ்லியைப் பாராட்டும் டோணி
மிர்பூர்: விராத் கோஹ்லி இப்போது நன்கு முதிர்ச்சி அடைந்த கிரிக்கெட் வீரராக மாறியுள்ளார் என்று கேப்டன் டோணி பாராட்டியுள்ளார்.
கோஹ்லிக்கும், டோணிக்கும் இடையேல லேசுபாசாக முட்டல் மோதல் இருப்பதாக பேசப்பட்டாலும் கூட கோஹ்லியை டோணி வாயார, மனதார வாழ்த்திப் பாராட்டியிருப்பது இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு நிச்சயம் சந்தோஷமான செய்திதான்.
எந்த பார்மெட்டாக இருந்தாலும், எதிரணி பவுலர்களை பார்ட் பார்ட் ஆக பிரித்து மேய்ந்து விடுகிறார் கோஹ்லி. முன்பை விட செம பார்மிலும் இருக்கிறார். இதைத்தான் டோணியும் பாராட்டியுள்ளார்.

அதிரடி ஆட்டம்
இலங்கைக்கு எதிரான நேற்றைய போட்டியில் விராத் கோஹ்லி 47 பந்துகளில் 56 ரன்களைக் குவித்தார். அதேபோல யுவராஜ் சிங்கும் 18 பந்துகளில் 35 ரன் குவித்தார். இருவரும் சேர்ந்து இந்தியாவின் வெற்றியை எளிதாக்கினர்.

டோணியுடன் இணைந்து
நேற்றைய போட்டியில் வெற்றி பெற இந்தியாவுக்கு 14 ரன்கள் தேவைப்பட்டபோது, கோஹ்லியும், டோணியும் இணைந்து அதை எடுத்தனர்.

முதிர்ச்சி வந்திருச்சு
போட்டிக்குப் பின்னர் டோணி செய்தியாளர்களிடம் பேசுகையில், கோஹ்லி நல்ல முதிர்ச்சியான வீரராக மாறியுள்ளார். தனது ஆட்டத்தில் மேலும் மெருகேற்றியுள்ளார்.

சிறப்பாக ஆடுகிறார்
கடந்த காலங்களில் கற்றுக் கொண்ட அனுபவங்கள் மூலம் தனது ஆட்டத்திறனை மேம்படுத்தியுள்ளார். யார் டார்கெட், எது டார்கெட், நமது பலம் என்ன என்பதை மிகத் தெளிவாக அறிந்து வைத்து ஆடுகிறார்.

தெரியாத இடத்தில் கால் வைக்காமல்
நமது பலம் என்ன என்று தெரியாமல், நமக்கு பலம் இல்லாத பகுதிகளில் கால் வைப்பது அபாயகரமானதாகும். அதை கோஹ்லி ஒருபோதும் செய்வதில்லை. அந்த வகையில் அவர் அருமையான வீரராக மாறியுள்ளார் என்றார் டோணி.


Click it and Unblock the Notifications