Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

விராட் கோலி மனிதரே இல்லை.. அவர் வந்தாலே சென்சுரி அடிச்சுட்டு தான் போவார்னு தோணும்

Recommended Video

கோஹ்லி வந்தாலே சதம் அடிப்பார்னு தோணும், தமீம் இக்பால் புகழாரம்- வீடியோ

மும்பை : விராட் கோலியை பார்த்து பல கிரிக்கெட் வீரர்களும் ஆச்சரியப்படுவது சமீப காலங்களில் வாடிக்கையாக இருக்கிறது.

அந்த வரிசையில் வங்கதேச அணியின் முன்னணி பேட்ஸ்மேன் தமிம் இக்பால் இணைந்துள்ளார்.

விராட் கோலி மனிதரே இல்லை என தனக்கு சில சமயம் சந்தேகம் வரும் என கூறி உள்ளார் தமிம்.

கோலி சாதனைகள்

கோலி சாதனைகள்

கோலி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் சர்வதேச ஒருநாள் அரங்கில் 10,000 ரன்களை கடந்தார். அதிவேகமாக 10,000 ரன்களை கடந்த வீரர் என்ற பெருமையை சச்சினை வீழ்த்தி பெற்றார். டெஸ்டில் 24 சதங்கள் அடித்து, சராசரி 54 வைத்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் 37 சதங்கள் அடித்து, சராசரி 59 வைத்துள்ளார்.

கோலி மனிதரே இல்லை

கோலி மனிதரே இல்லை

கிரிக்கெட் வரலாற்றில் ஏராளமான சாதனைகளை முறியடித்துள்ளார் கோலி. இதை பற்றி பேசிய தமிம் இக்பால், "அவர் செயல்படுவதை பார்த்து, சில சமயம் அவர் மனிதரே இல்லை என எனக்கு தோன்றும். அவர் பேட்டிங் செய்ய வரும் போது அவர் ஒவ்வொரு போட்டியிலும் சதம் அடிப்பாரோ என தோன்றும்" என கூறியுள்ளார்.

நம்ப முடியாதவர் கோலி

நம்ப முடியாதவர் கோலி

"அவர் தன்னை மேம்படுத்திக் கொள்வதிலும், தன் திறனை மேம்படுத்திக் கொள்வதிலும் நம்பமுடியாத அளவு செயல்படுகிறார். பார்த்து, கற்றுக் கொள்ள வேண்டியவர்களில் கோலியும் ஒருவர்" எனவும் புகழ்ந்தார் தமிம்.

கோலி ஆதிக்கம்

கோலி ஆதிக்கம்

"கடந்த 12 வருடங்களாக இந்த விளையாட்டில் அருமையாக செயல்பட்டு வரும் அனைத்து சிறந்த வீரர்களையும் நான் பார்த்துவிட்டேன். அவர்கள் அனைவருக்கும் ஒரு பலம் உண்டு. ஆனால், யாரும் விராட் அளவுக்கு இந்த விளையாட்டில் ஆதிக்கம் செலுத்தி நான் பார்க்கவில்லை" என தமிம் கூறினார்.

Story first published: Thursday, October 25, 2018, 15:21 [IST]
Other articles published on Oct 25, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+