
கோஹ்லி
கடந்த 2 ஆண்டுகளாக இந்திய அணியில் கோஹ்லி சிறப்பாக விளையாடி வருவது நம் அனைவருக்கும் தெரியும். அவரது சாதனைகள் அபாரமாக உள்ளது. அவர் சிறப்பாக பேட்டிங் செய்கிறார்.

டோணி
புதன்கிழமை இரவு நான் தென்னாப்பிரிக்க அணி வீரர்களுடன் அமர்ந்து சாப்பிடுகையில் சுரேஷ் ரெய்னா, ரோஹித் சர்மா, டோணி, ரஹானே ஆகியோர் பற்றி பேசிக் கொண்டிருந்தேன்.

பேட்டிங்
இந்திய அணியில் நல்ல பேட்டிங் வரிசை உள்ளது. ஒரு குறிப்பிட்ட வீரரை குறி வைப்பது எங்கள் பாணி அல்ல.

இந்தியா
இந்திய அணியை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. அவர்கள் தான் நடப்பு சாம்பியன். மேலும் சிறப்பான ஓடிஐ அணியும் கூட.

தோற்கடிப்பு
தகுதி வாய்ந்த இந்திய அணியை தோற்கடித்தால் எங்கள் அணிக்கு அது உத்வேகமாக இருக்கும். வரும் ஞாயிற்றுக்கிழமை நடக்கும் போட்டிக்கான டிக்கெட்டுகள் கிட்டத்தட்ட விற்றுத் தீர்ந்துவிட்டன என்று கேள்விப்பட்டோம்.

பெரிய வீரர்கள்
எப்பொழுது இந்தியா மெல்போர்னில் விளையாடினாலும் பெரிய எதிர்பார்ப்பு இருக்கும். அவர்களுக்கு இங்கு அமோக ஆதரவு உள்ளது. அந்த அணியில் சில பெரிய வீரர்கள் உள்ளனர் என்றார் டொமிங்கோ.


Click it and Unblock the Notifications