Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அணி வீரர்களை வைத்து அரசியல் செய்தாரா கும்ப்ளே? கோஹ்லியுடன் மோதல்.. திடுக்கிடும் தகவல் அம்பலம்

லண்டன்: இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோஹ்லிக்கும் தலைமை பயிற்சியாளர் அனில் கும்ப்ளேக்கும் நடுவே மோதல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பயிற்சியாளராக, கும்ப்ளேவின் பதவிக்காலம் ஜூன் 18ம் தேதியோடு முடிவடைய உள்ளது. இதையடுத்து அவரை அப்பதவியில் நீடிக்க செய்ய பிசிசிஐ தயாராக இல்லை. புதிய பயிற்சியாளருக்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ளது பிசிசிஐ.

வீரர்களுக்கான சம்பளத்தை 150 சதவீதம் உயர்த்த கேட்டார் கும்ப்ளே. கேப்டன் பதவியில் இருப்பவருக்கு கூடுதல் சுமை இருக்கும் என்பதால் ஊதியத்தில் 25 சதவீதம் அதிகம் வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

திருப்பம்

திருப்பம்

இந்த கோரிக்கையால்தான் கோபமடைந்து கும்ப்ளேயை அப்பதவியில் தொடரச் செய்யாமல் தவிர்க்க பிசிசிஐ திட்டமிட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. ஆனால் இதில் தற்போது திடுக்கிடும் திருப்பம் ஒன்று அம்பலமாகியுள்ளது.

நாளிதழ் செய்தி

நாளிதழ் செய்தி

முன்னணி ஆங்கில நாளிதழ் ஒன்று இத்தகவலை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விராட் கோஹ்லிக்கும், கும்ப்ளேக்கும் சில மாதங்களாகவே மோதல் இருந்து வருவதாக அந்த நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

ஆஸி. தொடரில் மோதல்

ஆஸி. தொடரில் மோதல்

இந்தியா-ஆஸ்திரேலியா நடுவேயான டெஸ்ட் தொடரில், 4வது டெஸ்ட் போட்டி தரம்சாலாவில் நடைபெற்றது. அப்போது கேப்டன் கோஹ்லிக்கு கூட தெரிவிக்காமல், அணியில் குல்தீப் யாதவை சேர்த்தாராம் கும்ப்ளே. அப்போதுதான் இருவருக்கும் மோதல் வெடித்துள்ளது.

ஊதிய உயர்வு

ஊதிய உயர்வு

இதன்பிறகு, ஊதிய உயர்வுக்கு ஆசைப்பட்ட கும்ப்ளே, வீரர்கள் கருத்தை கேட்காமலேயே, அவர்களுக்கும் ஊதிய உயர்வு வேண்டும் என கேட்டுள்ளார். பக்கத்து இலைக்கு பாயாசம் கேட்டால், தனது இலைக்கும் வைப்பார்கள் என திருமண வீட்டு பந்தி டெக்னிக்கை கும்ப்ளே பயன்படுத்தியுள்ளார்.

கோஹ்லி பெயரும்

கோஹ்லி பெயரும்

இதில் விராட் கோஹ்லி பெயரையும் இழுத்துவிட்டுள்ளார். கோஹ்லியை பொறுத்தளவில் அனைத்து ஏ கிரேடு வீரர்களுக்கும் சம ஊதியம் என்ற கொள்கை உள்ளவராம். ஆனால் கேப்டனுக்கு கூடுதலாக 25 சதவீதம் ஊதியம் தர வேண்டும் என தானாக முன்வந்து கும்ப்ளே கருத்து கூறியுள்ளாராம். இதனால் கோஹ்லி அதிருப்தியில் உள்ளாராம்.

கும்ப்ளேவுக்கு வாய்ப்பு

கும்ப்ளேவுக்கு வாய்ப்பு

புதிய பயிற்சியாளர் நேர் காணலுக்கு கும்ப்ளேவும் விண்ணப்பித்துள்ளார். இருப்பினும், மோதல்கள் மற்றும் பணம் விவகாரத்தில் குறியாக உள்ளதால் கும்ப்ளேவை பயிற்சியாளராக தொடரச் செய்ய பிசிசிஐ விரும்பாது என தெரிகிறது. கும்ப்ளே பயிற்சியாளராகியபிறகு கடந்த ஓராண்டில் அனைத்து வகை கிரிக்கெட்டிலும் இந்திய அணி சிறப்பாக வெற்றி பெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.

Story first published: Tuesday, May 30, 2017, 16:50 [IST]
Other articles published on May 30, 2017
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+