Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டெஸ்ட்... ஒருநாள்... டி20... 3 வடிவங்கள்லயும் அய்யா டாப்பு... ஒருநாள் போட்டிகள்ல டாப்போ டாப்பு!

புனே : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான டெஸ்ட், டி20 போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. ஒருநாள் தொடரின் முதல் போட்டியும் நடந்துள்ளது.

இந்நிலையில் ஐசிசி சர்வதேச டி20 மற்றும் ஒருநாள் தொடர்களுக்கான தரவரிசையை வெளியிட்டுள்ளது.

இதில் இந்திய கேப்டன் விராட் கோலி, ஒருநாள் போட்டிகளில் முதலிடத்திலும் டி20யில் 4வது இடம் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் 5வது இடத்திலும் இடம்பிடித்துள்ளார்.

தரவரிசை பட்டியல் வெளியீடு

தரவரிசை பட்டியல் வெளியீடு

இந்தியா -இங்கிலாந்து இடையிலான டெஸ்ட் தொடர், டி20 தொடர் நடந்து முடிந்துள்ளது. ஒருநாள் தொடரின் முதல் போட்டி புனேவில் நேற்றைய தினம் நடந்து முடிந்துள்ளது. இதில் 66 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி கொண்டுள்ளது. இந்நிலையில் ஐசிசி தனது தரவரிசை பட்டியல்களை வெளியிட்டுள்ளது.

முதல் 5 இடங்கள்

முதல் 5 இடங்கள்

இதில் விராட் கோலி டெஸ்ட் போட்டிகளில் 5வது இடத்திலும் ஒருநாள் போட்டிகளில் முதலிடத்திலும் மற்றும் டி20 போட்டிகளில் 4வது இடத்திற்கும் முன்னேறியுள்ளார். இதனிடையே 3 வடிவங்களிலும் முதல் 5 இடங்களில் இடம்பெற்றுள்ள ஒரே சர்வதேச வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

3வது இடத்தில் ரோகித்

3வது இடத்தில் ரோகித்

இதனிடையே ஒருநாள் போட்டிகளில் ரோகித் சர்மா 836 புள்ளிகளுடன் 3வது இடத்தில் உள்ளார். இதேபோல டி20 வரிசையில் 13வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். கடந்த இங்கிலாந்துக்கு எதிரான 5வது டி20 போட்டியில் இவரது ஆட்டம் மிகச்சிறப்பாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

தென்னாப்பிரிக்க பௌலர் முதலிடம்

தென்னாப்பிரிக்க பௌலர் முதலிடம்

இந்த டி20 வரிசையில் தென்னாப்பிரிக்க பௌலரான தப்ரைஸ் சாம்சி முதலிடத்தை பிடித்துள்ளார். இதேபோல ஒருநாள் போட்டிகள் வடிவத்தில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் 837 புள்ளிகளுடன் கோலிக்கு அடுத்த இடத்தில் உள்ளார். ராஸ் டெய்லர் மற்றும் ஆரோன் பின்ச் ஆகியோர் 4வது மற்றும் 5வது இடங்களில் உள்ளனர்.

Story first published: Wednesday, March 24, 2021, 17:19 [IST]
Other articles published on Mar 24, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+