உலகின் டாப் 20 இடங்களில் ஒரே இந்தியர்.. இன்ஸ்டாகிராமில் ஒரே பதிவுக்கு கோலிக்கு இத்தனை கோடியா?
மும்பை: சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவு வெளியிடுவதற்கு அதிக சம்பளம் பெறும் விளையாட்டு வீரர்கள் யார் என்ற பட்டியல் தற்போது வெளியாகி இருக்கிறது. இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பல விளையாட்டு வீரர்கள் நடிகர்கள் போன்ற பிரபலங்களை பல்வேறு ரசிகர்கள் பின் தொடர்வார்கள்.
இதன் மூலம் விளையாட்டு வீரர்கள் தங்களது instagram பக்கத்தில் சில விளம்பர பதிவுகளை வெளியிடுவார்கள். இதற்கு தனியாக வருமானம் கிடைக்கும். அந்த வகையில் உலகில் அதிக மக்களால் பின் தொடரப்படும் விளையாட்டு வீரர் என்ற பெருமையை கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ பெற்றிருக்கிறார்.

கிறிஸ்டியானோ ரொனால்டோவை 65 கோடி ரசிகர்கள் instagram பக்கத்தில் பின் தொடக்கிறார்கள். இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் இந்திய கிரிக்கெட் அணி வீரர் விராட் கோலி இருக்கிறார். விராட் கோலியை 27 கோடி ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் பின்தொடர்கின்றனர். இதன் மூலம் ஆசிய அளவில் மற்றும் கிரிக்கெட் வீரர்களில் அதிக ஃபாலோவர்ஸ் வைத்திருக்கும் வீரராக கோலி இருக்கின்றார்.
இந்த நிலையில் influencer marketing hub என்ற தளம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ரொனால்டோ ஒரு பதிவுக்காக சமூக வலைத்தளத்தில் இந்திய ரூபாய் மதிப்பில் 27 கோடியே 65 லட்சம் ரூபாய் சம்பளமாக பெறுகிறார் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் மற்றொரு கால்பந்து ஜாம்பவானான லியோனல் மெஸ்ஸி இருக்கின்றார். மெஸ்ஸி ஒரு பதிவுக்கு 22 கோடி சம்பளமாக பெறுகிறார்.
இந்த பட்டியலில் இந்திய வீரர் விராட் கோலி மூன்றாவது இடத்தை பிடித்திருக்கிறார். விராட் கோலி ஒரு பதிவுக்கு 11 கோடியே 85 லட்சம் ரூபாயை இன்ஸ்டாவில் விளம்பரத்திற்கான சம்பளமாக பெறுகிறார். இந்த பட்டியலில் நான்காம் இடத்தில் மற்றொரு கால்பந்து வீரரான நேமர் இருக்கின்றார். அவர் ஒரு பதிவுக்கு ஒன்பது கோடி ரூபாயை சம்பளமாக பெறுகின்றார். இந்த பட்டியலில் முதல் இருவது இடத்தில் விராட் கோலி தவிர வேறு எந்த ஒரு இந்திய வீரர்களும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications