Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கிரிக்கெட் வரலாற்றிலேயே யாரும் செய்யாத பிரம்மாண்ட சாதனை.. விராட் கோலி 600 இன்னிங்ஸ் ரெக்கார்டு

மும்பை: நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் விராட் கோலி 4 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். அதே சமயம் அவர் இமாலய கிரிக்கெட் சாதனை ஒன்றையும் செய்து இருக்கிறார். இது வரை சர்வதேச கிரிக்கெட்டில் ஏழு வீரர்கள் மட்டுமே 600 இன்னிங்ஸ் விளையாடி இருக்கின்றனர்.

எட்டாவது வீரராக விராட் கோலி 600 இன்னிங்ஸ் விளையாடி அந்த ஜாம்பவான்கள் பட்டியலில் இணைந்தார். நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸ் கோலியின் 200வது டெஸ்ட் இன்னிங்ஸ் மற்றும் 600வது சர்வதேச போட்டி இன்னிங்ஸ் ஆக அமைந்தது. இதில் மிகப்பெரிய சாதனையாக 600 இன்னிங்ஸ் ஆடிய வீரர்களிலேயே அதிக ரன் குவித்த வீரராக விராட் கோலி இருக்கிறார்.

ind vs nz india virat kohli

அவர் 600 இன்னிங்ஸ்களில் 27,133 ரன்கள் குவித்து இருக்கிறார். இந்த பட்டியலில் இடம் பெற்று இருக்கும் சச்சின் டெண்டுல்கர், ரிக்கி பாண்டிங், ஜாக்கஸ் காலிஸ், குமார் சங்ககாரா, ராகுல் டிராவிட், மகிளா ஜெயவர்தனே, சனத் ஜெயசூர்யா என ஏழு வீரர்களில் ஒருவர் கூட 27,000 ரன்கள் என்ற மைல் கல்லை எட்டவில்லை.

இரண்டாவது இடத்தில் இருக்கும் சச்சின் டெண்டுல்கர் 600 இன்னிங்ஸ் முடிவில் 26020 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தார். அந்த வகையில் விராட் கோலி இமாலய சாதனையை செய்து இருக்கிறார். அவர் இதுவரை 200 டெஸ்ட் இன்னிங்ஸ்கள், 283 ஒரு நாள் போட்டி இன்னிங்ஸ்கள் மற்றும் 117 சர்வதேச டி20 இன்னிங்ஸ்களில் விளையாடி இருக்கிறார்.

சமீப காலமாக அவர் டெஸ்ட் போட்டிகளில் சரியாக ரன் குவிப்பதில்லை என்ற விமர்சனம் இருந்து வருகிறது. அப்படி இருந்தும் அவர் 600 இன்னிங்ஸ்களில் 27000 ரன்கள் என்ற மைல் கல்லை எட்டி இருக்கிறார். 2020 ஆம் ஆண்டு முதல் விராட் கோலி பேட்டிங்கில் சரிவை சந்தித்து இருக்கிறார். எனினும், அதற்கு முந்தைய ஆண்டுகளில் அவர் உச்சகட்ட ஃபார்மில் ரன் குவித்ததன் காரணமாக சச்சின் டெண்டுல்கரை முந்தி 600 இன்னிங்ஸ்களில் அதிக ரன் குவித்த வீரராக இருக்கிறார்.

600 சர்வதேச இன்னிங்ஸ் ஆடிய வீரர்கள் பட்டியல் (ரன் குவிப்பு வரிசையில்) -

27133 - விராட் கோலி
26020 - சச்சின் டெண்டுல்கர்
25386 - ரிக்கி பாண்டிங்
25212 - ஜாக்கஸ் காலிஸ்
24884 - குமார் சங்கக்காரா
24097 - ராகுல் டிராவிட்
21815 - மகிளா ஜெயவர்த்தனே
19917 - சனத் ஜெயசூர்யா

Story first published: Saturday, November 2, 2024, 13:25 [IST]
Other articles published on Nov 2, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+