தோல்வியில் துவண்ட ஆர்சிபி.. விராட் கோலி கொடுத்த உற்சாகம்.. முதல் வெற்றியை பதிவு செய்து அசத்தல்!
மும்பை: தோல்வியில் துவண்டு போயுள்ள ஆர்சிபி அணியின் மகளிர் வீராங்கனைகளுக்கு ஆர்சிபி ஆடவர் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி உற்சாகம் கொடுத்துள்ளார். இதன் காரணமாக ஆர்சிபி அணி, மகளிர் பிரிமீயர் லீக் தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.
மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் மார்ச் 4ம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் மும்பை மற்றும் டெல்லி அணிகள் அடுத்தடுத்து வெற்றிகளை பெற்று புள்ளிப் பட்டியலில் முதல் இரு இடங்களில் உள்ளன.
ஆனால் நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா தலைமையிலான பெங்களூரு அணி 5 போட்டிகளில் விளையாடி 5 போட்டியிலும் தோல்வியடைந்துள்ளது. இதன் காரணமாக மகளிர் பிரிமீயர் தொடரில் இருந்து வெளியேற உள்ள முதல் அணியாக பெங்களூரு அணி இருக்கும் என்று பார்க்கப்படுகிறது.

மும்பையில் விராட் கோலி
இதனிடையே மகளிர் பிரிமீயர் லீக் தொடர் முழுவதும் மும்பையின் மைதானங்களிலேயே நடைபெற்று வருகிறது. அதேபோல் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடக்க உள்ளது. இதன் காரணமாக இந்திய வீரர்களும் மும்பையில் உள்ளனர். இந்த நிலையில் தோல்வியில் துவண்டு போயுள்ள பெங்களூரு அணிக்கு, விராட் கோலி உற்சாகம் கொடுத்துள்ளார்.

மகளிர் வீராங்கனை உற்சாகம்
மும்பையில் அடுத்தப் போட்டியில் பயிற்சியில் ஈடுபட்டுள்ள விராட் கோலி, இன்று ஆர்சிபி மகளிர் அணியை சந்தித்துள்ளார். இன்றைய போட்டியில் ஆர்சிபி அணி யுபி வாரியர்ஸ் அணியை எதிர்கொண்டு விளையாடி வருகிறது. இந்தப் போட்டிக்கு முன்பாக மகளிர் அணி வீராங்கனை விராட் கோலி சந்தித்து, உற்சாகம் கொடுத்துள்ளார்.

விராட் கோலி சந்திப்பு
இதுகுறித்து ஆர்சிபி அணியின் வீராங்கனை ஹீதர் நைட் கூறுகையில், இன்று மதிய நேரத்தில் திடீரென ஆர்சிபி அணியின் ஓய்வறைக்கு விராட் கோலி வருகை வந்தார். அப்போது ஆர்சிபி அணியின் அனைத்து வீராங்கனைகளுக்கும் உற்சாகம் கொடுக்கும் வகையில் விராட் கோலி பேசினார் என்று தெரிவித்தார். ஆர்சிபி அணியின் மகளிர் அணிக்கு, ஆர்சிபி அணியின் வீரராக விராட் கோலி உற்சாகம் கொடுத்துள்ளது ரசிகர்களிடையே பாராட்டப்பட்டு வருகிறது.

ஆர்சிபி=க்கு முதல் வெற்றி
அண்மையில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சதம் விளாசிய விராட் கோலி, மீண்டும் தனது பழைய ஃபார்மை மீட்டுக் கொண்டுள்ளார். இந்திய அணியின் ரன் மெஷினாக நிரூபித்துள்ள விராட் கோலி, ஐபிஎல் விளம்பர பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் மகளிர் பிரிமீயர் லீக் தொடரிலும் விராட் கோலியின் கவனம் சென்றுள்ளது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளது. அதேபோல் விராட் கோலி பேசிய பின் விளையாடிய போட்டியில், ஆர்சிபி அணி முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.


Click it and Unblock the Notifications