For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கிரிக்கெட்டின் ரோஜர் பெடரர் அவர்தாங்க... ஏபி டீ வில்லியர்ஸ் புகழ்ச்சி

சென்னை : கிரிக்கெட்டின் ரோஜர் பெடரர் என்று கூறுமளவிற்கு வேகமான பேட்ஸ்மேனாக இந்திய கேப்டன் விராட் கோலி உள்ளதாக முன்னாள் தென்னாப்பிரிக்க வீரர் ஏபி டீ வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல்லில் கடந்த 9 ஆண்டுகளாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் கேப்டன் விராட் கோலியுடன் இணைந்து பணியாற்றிவரும் வில்லியர்ஸ், கோலியின் வளர்ச்சியை தொடர்ந்து பார்த்து வருபவர்.

இந்நிலையில், சச்சின் டெண்டுல்கரை விட விராட் கோலி சிறப்பானவர் என்றும் டீ வில்லியர்ஸ் கூறியுள்ளார்.

ஆர்சிபி அணியின் வீரர்

ஆர்சிபி அணியின் வீரர்

முன்னாள் தென்னாப்பிரிக்க வீரரும் கடந்த 9 ஆண்டுகளாக ஐபிஎல்லின் ஆர்சிபி அணியில் விளையாடி வருபவருமான ஏபி டீ வில்லியர்ஸ் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜிம்பாப்வே கிரிக்கெட் வீரர் பொம்மி ம்பாங்வாவுடன் நேரலையில் உரையாடி விராட் கோலி, சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட வீரர்கள் குறித்து கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.

விராட் கோலி குறித்து டீ வில்லியர்ஸ்

விராட் கோலி குறித்து டீ வில்லியர்ஸ்

டெஸ்ட் கிரிக்கெட்டில் முதலிடத்தில் உள்ள ஸ்டீவ் ஸ்மித்துடன் விராட் கோலியை ஒப்பிடுமாறு கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த டீ வில்லியர்ஸ், விராட் கோலி தனக்கு கிரிக்கெட்டின் ரோஜர் பெடரராகவே தோன்றுவதாக தெரிவித்துள்ளார். ஸ்மித், ரோஜர் பெடரரைவிட மேம்பட்டவர் என்றும் அவர் கூறியுளளார். ஆயினும் இருவரில் தனக்கு பிடித்தமானவர் விராட் கோலி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சாதனைகளை முறியடித்தவர்

சாதனைகளை முறியடித்தவர்

சச்சின் டெண்டுல்கரை விட விராட் கோலி மிகவும் சிறப்பானவர் என்றும் டீ வில்லியர்ஸ்குறிப்பிட்டுள்ளார். சச்சின் டெண்டுல்கர் பல்வேறு பேட்டிங் சாதனைகளை படைத்துள்ளார் என்றும் ஆனால் அந்த சாதனைகளை விராட் கோலி முறியடித்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார். இலக்குகளை முறியடிக்கும் வல்லமை விராட் கோலிக்கு அதிகமாக உள்ளதாகவும் அவர் புகழாரம் சூட்டினார்.

இளைஞர்களுக்கு சிறந்த உதாரணம்

இளைஞர்களுக்கு சிறந்த உதாரணம்

விராட் கோலி மற்றும் தனக்கும் சச்சின் டெண்டுல்கர் ரோல் மாடலாக உள்ளதாக டீ வில்லியர்ஸ் குறிப்பிட்டுள்ளார். மேலும் பல இளைஞர்களுக்கு அவர் சிறந்த உதாரணமாக உள்ளதையும் சுட்டிக் காட்டினார். பல சூழ்நலைகளில் சச்சின், தனக்கு ஆச்சரியத்தையே பரிசளித்துள்ளதாக அவர் கூறியுள்ளார். ஆயினும் எதிரணியினரின் ரன்களை சேஸ் செய்யும் நெருக்கடி சூழல்களில் விராட் கோலி சிறப்பாக செயல்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Story first published: Tuesday, May 12, 2020, 12:10 [IST]
Other articles published on May 12, 2020
English summary
AB de Villiers says Virat Kohli is the Roger Federer of cricket
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+